இந்து மதத்தையும், கோவிலையும் காட்டி தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது என்று வைகோ கூறினார்.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திர இந்தியாவில் நெருக்கடி நிலையைவிட மோசமான சட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி, மக்கள் சக்தியைத் திரட்டி மோடி அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் வெற்றிகரமாக நடைபெறுகிறது. கோவிலையும், இந்து மதத்தையும் காட்டி தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது. இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய இடத்தில் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.