ஜப்பான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்படது. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை நிலநடுக்கம் தாக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. சாலைகள், வீதிகள் இரண்டாக பிளந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. நிலநடுக்கத்தால் 48 பேர் பலியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. அதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.

31, 800 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். நிலநடுக்கத்திற்கிடையே நோட்டோ மாகாணத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கடலோர நகரமான சூஸுவில் அதன் மேயர் மசுஹிரோ இசுமியா கூறுகையில், அங்கு ஒரு வீடுகள் கூட இல்லை. எல்லாமே தரைமட்டமாகிவிட்டன என்றார். பல இடங்களில் மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. கடந்த 24 மணி நேரமாக 1000 பேர் காத்திருக்கும் சூழலில் புல்லட் ரயில்களின் இயக்கம் தொடங்கியது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 18,500 இறந்தும் மாயமாகியும் இருந்தனர். இதன் ரிக்டர் அளவு 9.0 ஆகும். ஃபுகுஷிமாவில் இருந்த அணுஆயுத உலையை அப்படியே அழித்துவிட்டது. இதுதான் உலகின் மோசமான பேரிடர் என சொல்லப்பட்டது.