பிரதமர் ராமேஸ்வரம் வருகையையொட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 மீனவர்களை இலங்கை அரசு விடுத்துள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 40 பேரை விடுதலை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரும் , நாகை மாவட்டம் மீனவர்கள் 10 பேர் என 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.