அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது மத்திய அமலாக்கத்துறை.

முந்தைய நான்கு சம்மன்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்த நிலையில், இந்த புதிய சம்மன் பிப்.2 ஆம் தேதி ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜன.13 அன்று நான்காவது சம்மன் ஜன.18-ம் தேதி ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்டது. அந்த தேதிகளில் தில்லி முதல்வர் கோவாவுக்கு மூன்று நாள் பயணம் சென்றிருந்தார். வருகிற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள கோவாவில் கட்சி உறுப்பினர்களைச் சந்திக்க அவர் சென்றதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

மேலும், தனது தரப்பில் அனுப்பிய பதில் மனுக்களை அமலாக்கத்துறை பொருட்படுத்தவில்லை என்றும் அதற்கு பதிலாக புதிய சம்மன்களைப் பிறப்பிப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.