தமிழ்­நாட்­டின் தாய் யானை­யா­கத் திகழ்ந்­த­வர் தலை­வர் கலை­ஞர்: முதல்வர் ஸ்டாலின்!

நாளை நடைபெறும் கலைஞர் நினைவிட திறப்புவிழாவுக்கு வரவேற்பதாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மடல் எழுதி உள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

என் உயி­ரு­டன் கலந்­தி­ருக்­கும் தலை­வர் கலை­ஞ­ரின் அன்பு உடன்­பி­றப்பு­களுக்கு, உங்­க­ளில் ஒரு­வன் எழு­தும் மடல். எத்­த­னையோ நிகழ்­வு­க­ளின்­போது உடன்­பி­றப்­பு­க­ளுக்­குக் கடி­தம் எழு­தி­ய­வர் நம் உயிர்­நி­கர் தலை­வர் கலை­ஞர். உங்­க­ளைப் போன்ற உணர்­வு­டன் அந்­தக் கடி­தங்­க­ளைப் படித்­த­வன்­தான் உங்­க­ளில் ஒரு­வ­னான நான். இம்­மண்ணை விட்­டுச் சென்­றா­லும், நம் நெஞ்­சில் நிறைந்­து­விட்ட தலை­வர் கலை­ஞர் அவர்­கள் தன் மர­ணத்­தி­லும் போரா­ளி­யாக – சுய­ம­ரி­யாதை வீர­ரா­கச் சட்­டப்­போ­ராட்­டம் நடத்தி வெற்­றி­யு­டன் பெற்ற சென்னை மெரினா கடற்­க­ரை­யில் அவ­ருக்­கு­ரிய இடத்­தில், அவ­ரது நினை­வி­டம் கலைத்­தி­ற­னு­டன் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. பிப்­ர­வரி 26-ஆம் தேதி நடை­பெ­ற­வுள்ள அதன் திறப்­பு­வி­ழா­வுக்கு உடன்­பி­றப்­பு­க­ளாம் உங்­களை, உங்­க­ளில் ஒரு­வ­னான நான் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ரா­க­வும், கழ­கத்­தின் தலை­வ­ரா­க­வும் வர­வேற்­கக் கட­மைப்­பட்­டுள்­ளேன்.

யானை இருந்­தா­லும் ஆயி­ரம் பொன், இறந்­தா­லும் ஆயி­ரம் பொன் என்­பார்­கள். கார­ணம், யானை­தான் காட்­டின் வளத்­தைப் பெருக்­கும். இயற்­கை­யின் சமச்­சீ­ரான நிலை­யைத் தக்­க­வைக்­கும். பல்­லு­யிர்ச் சூழ­லைப் பாது­காக்­கும். யானை வாழ்ந்­த­தற்­கான அடை­யா­ளம் அது நடந்து சென்ற பாதை மட்­டு­மல்ல, அது உலா வந்த காட்­டின் பசு­மை­யும் செழு­மை­யும்­தான். தமிழ்­நாட்­டின் தாய் யானை­யா­கத் திகழ்ந்­த­வர் தலை­வர் கலை­ஞர். 95 ஆண்­டு­கா­லம் வாழ்ந்­த ­வர் 80 ஆண்­டு­க­ளுக்கு மேல் பொது­வாழ்க்­கைக்­கா­கத் தன்னை அர்ப்­ப­ணித்­தார். இனம் காத்­தி­டப் போரா­டி­னார். மொழி­காக்­கச் சிறை சென்­றார். மக்­க­ளின் மனங்­களை வென்று 5 முறை முத­ல­மைச்­சர் ஆனார். இந்­திய அர­சி­ய­லின் தவிர்க்க முடி­யாத தலை­வ­ராக உயர்ந்­தார். நவீ­னத் தமிழ்­நாட்­டைத் தன் சிந்­தனை உளி­யால் செம்­மை­யு­றச் செதுக்­கி­னார். எதிர்­கா­லத் தலை­மு­றைக்­கும் வாழ்­வ­ளிக்­கும் திட்­டங்­களை வகுத்­த­ளித்த பிறகே நிரந்­த­ர­மாக ஓய்வு கொண்­டார்.

பேர­றி­ஞர் அண்ணா உரு­வாக்­கிய திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எனும் அர­சி­யல் பேரி­யக்­கம், மக்­கள் பக்­கம் நின்­றது. அவர்­க­ளின் மனங்­க­ளில் குடி­யே­றி­யது. மாநி­லத்­தின் ஆட்­சி­யைப் பிடித்­தது. அந்த அண்ணா நம்மை விட்டு மறைந்த நிலை­யில், தமிழ்நாட்­டின் முத­ல­மைச்­ச­ரா­னார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். எதை­யும் தாங்­கும் இத­யம் வேண்­டும் தம்பி என்­ற­வர் அண்ணா. அந்த அண்­ணா­வின் இத­யத்­தைக் இர­வ­லா­கக் கேட்­ட­வர் தலை­வர் கலை­ஞர். “நீ இருக்­கு­மி­டந்­தேடி யான் வரும் வரை­யில் இர­வ­லாக உன் இத­யத்தை தந்­தி­டண்ணா நான் வரும்­போது கையோடு கொணர்ந்து அதை உன் கால் மல­ரில் வைப்­பேன் அண்ணா” என்று இரங்­கற்­பா­வில் இலக்­கி­யம் படைத்­த­வர் கலை­ஞர். சொன்­ன­தைச் செய்­வோம். செய்­வ­தைச் சொல்­வோம் என்­ப­து­தான் தலை­வ­ரின் அர­சி­யல் இலக்­க­ணம். சொன்­ன­து­போ­லவே, அவர் நிரந்­தர ஓய்­வெ­டுத்­துக் கொண்­ட­போது, தன் அண்­ண­னின் அரு­கி­லேயே உறக்­கம் கொண்­டார். இலக்­கி­ய­மாய் நிலைத்­து­விட்ட, ‘இர­வல் கேட்ட இத­யத்­தை’­யும் சொன்­னது போலவே, அண்­ணா­வின் கால்­ம­ல­ரில் வைத்து வர­லாற்­றைப் படைத்­தார்.

வங்­கக் கட­லோ­ரம் தமிழ் அலை­கள் தாலாட்ட 1969-இல் பேர­றி­ஞர் அண்ணா நிரந்­தர ஓய்­வெ­டுக்­கும்­படி இடம் அமைத்­துக் கொடுத்­த­வரே தலை­வர் கலை­ஞர்­தான். ஓங்கி உயர்ந்த தூணும், அணையா விளக்­கும் கொண்ட அண்ணா சதுக்­கத்தை அமைத்­த­வ­ரும் அவர்­தான். தன்னை அர­சி­யல் களத்­தில் ஆளாக்­கிய அண்­ணா­வுக்கு மட்­டு­மல்ல, அர­சி­யல் களங்­க­ளில் மற்­போர் போல சொற்­போர் நடத்­தி­னா­லும் தமி­ழ­ருக்­கே­யு­ரிய பண்­பாட்­டு­ ட­னும் நாக­ரி­கத்­து­ட­னும் மாற்று இயக்­கத்­தின் தலை­வர்­கள் மறைந்­த­போ­தும் அவர்­க­ளுக்கு நினை­வி­டம் அமைத்த அர­சி­யல் பண்­பா­ளர் தலை­வர் கலை­ஞர். மூத­றி­ஞர் ராஜாஜி, பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் ஆகி­யோ­ரின் நினை­வி­டங்களை அமைத்­த­வர் கலை­ஞர்­தான். எமர்­ஜென்சி எனும் நெருக்­க­டி­நி­லைக் காலத்­தில், 1975 அக்­டோ­பர் 2-ஆம் நாள் காந்தி பிறந்­த­நா­ளன்று பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் மர­ண­மெய்­திய போது, முத­ல­மைச்­ச­ராக இருந்த கலை­ஞர் அவர்­களே மழை­யை­யும் சக­தி­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், கிண்­டி­யில் உள்ள இடத்­திற்கு இரவு நேரத்­தில் நேரில் சென்று, கார் விளக்­கொ­ளி­யில் ஆய்வு செய்து, அந்த இடத்­தைத் தூய்­மைப்­ப­டுத்­தும் பணியை, தலை­யில் முண்­டாசு கட்­டிக்­கொண்டு மேற்பார்­வை­யிட்டு, அரசு மரி­யா­தை­யு­டன் பெருந்­த­லை­வர் காம­ரா­ச­ரின் உடலை எரி­யூட்­டச் செய்து, அந்த இடத்­தில் காம­ரா­ஜ­ரின் ஸ்தாபன காங்­கி­ரஸ் சின்­ன­மான ராட்­டைச் சின்­னத்­து­டன் கூடிய நினை­வி­டத்தை அமைத்­த­வர் கலை­ஞர்.

இரா­மா­ய­ணத்­தைச் சக்­க­ர­வர்த்தி திரு­ம­கன் என்ற பெய­ரில் எழு­தி­ய­வர் மூத­றி­ஞர் ராஜாஜி என்­ப­த­னால் அவ­ரது நினை­வி­டத்தை இரா­ம­ரின் பட்­டா­பி­ஷேக மகு­டம் போல அமைத்­த­வ­ரும் கலை­ஞர்­தான். மாற்­றுக் கருத்­து­டை­ய­வர்­க­ளே­னும் அவர்­தம் மனம் எதை விரும்­பி­யதோ அத­னையே நினை­வி­டத்­தின் அடை­யா­ள­மாக்­கி­ய­வர் தலை­வர் கலை­ஞர். மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர் அவர்­க­ளின் நினை­வி­டத்­தில் முதன் முத­லில் குடை போன்ற வடி­வ­மைப்பை அமைத்­த­வ­ரும் கலை­ஞரே. பல­ருக்­கும் நிழல் தரு­ப­வ­ராக எம்.ஜி.ஆர்.இருந்­தார் என்­ப­தன் அடை­யா­ளம் அது. தேர்­தல் களத்­துப் பகையை நெஞ்­சில்கொள்­ளா­மல், தன் காலத்­துத் தலை­வர்­க­ளுக்கு, உரிய மரி­யா­தை­யு­டன் நினை­வி­டம் அமைத்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், அவர் விரும்­பி­ய­படி கடற்­க­ரை­யில் அண்­ணா­வின் அருகே ஓய்­வெ­டுக்க அன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள் அனு­மதி தர­வில்லை. தம்­பிடி இடம் கூடத் தர­மாட்­டோம் எனக் காழ்ப்­பு­ணர்­வைக் காட்­டி­னார்­கள். கழ­கத்­தி­னர் மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாடே கலை­ஞ­ருக்­குக் கடற்­க­ரை­யில் இடம் ஒதுக்க வேண்­டும் எனக் கண்­ணீர்க் கோரிக்கை வைத்­தது. இரக்­கம் சுரக்­க­வில்லை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு! இரத்­தம் கொதித்­தது உடன்­பி­றப்­பு­க­ளுக்கு! சட்­டப் போராட்­டத்­தைத் தொடங்­கி­னோம். தந்­தைக்கு மகன் செய்­யும் கட­மை­யாக நினைக்­கா­மல், தலை­வ­ருக்­குத் தொண்­டன் செய்ய வேண்­டிய கைம்­மா­றாக இதனை முன்­னெ­டுத்­தேன். விடிய விடிய நடந்த விசா­ர­ணைக்­குப் பின், நண்­ப­கல் பொழு­தில் நல்ல தீர்ப்பு வந்­தது. கடற்­க­ரை­யில் இடம் ஒதுக்­கித் தீர்ப்­ப­ளித்­த­னர் நீதி­ய­ர­சர்­கள். தன் அண்­ண­னி­டம் இர­வ­லா­கப் பெற்ற இத­யத்தை ஒப்­ப­டைத்து, சொன்ன சொல் காத்த தம்­பி­யா­னார் தலை­வர் கலை­ஞர். ‘ஓய்­வெ­டுக்­கா­மல் உழைத்­த­வன் இதோ ஓய்வு கொண்­டி­ருக்­கி­றான்” என்று தலை­வர் கலை­ஞரே எழு­தித் தந்த தனக்­கான கல்­லறை வரி­க­ளு­டன் கடற்­க­ரை­யில் அவர் ஓய்வு கொள்­ளத் தொடங்­கி­னார். அன்­றா­டம் ஆயி­ர­மா­யி­ரம் உடன்­பி­றப்­பு­கள் அங்கே வந்து கண்­ணீ­ரைக் காணிக்­கை­யாக்­கு­வது வாடிக்கை.

2021 தேர்­த­லில் கழ­கம் பெற்ற வெற்­றியை உயிர்­நி­கர் தலை­வர் கலை­ஞ­ரின் ஓய்­வி­டத்­தில்­தான் உங்­க­ளில் ஒரு­வ­னான நானும் காணிக்­கை­யாக்­கி­னேன். தலை­வ­ரின் ஓய்­வி­டத்­தில் தங்­க­ளின் திரு­ம­ணத்தை நடத்தி, புது­வாழ்­வைத் தொடங்­கிய வெற்­றி­க­ர­மான இணை­யர்­கள் உண்டு. பிறந்த குழந்­தை­யைத் தலை­வர் கலை­ஞ­ரின் ஓய்­வி­டத்­தில் கிடத்தி, குடும்­பத்­தின் மூதா­தை­யரை வணங்­கு­வது போன்ற வணக்­கத்­தைச் செலுத்­தி­ய­வர்­கள் உண்டு. மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், திரு­நங்­கை­யர், விளிம்­பு­நிலை மக்­கள் எனத் தலை­வர் கலை­ஞ­ரின் ஆட்­சித்­தி­ற­னால் தங்­கள் வாழ்­வில் ஒளி­பெற்­ற­வர்­க­ளின் நன்றி செலுத்­தும் இட­மாக கலை­ஞ­ரின் ஓய்­வி­டம் அமைந்­தது. தமி­ழுக்­கா­க­வும், தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கா­க­வும், தமி­ழர்­க­ளின் உயர்­வுக்­கா­க­வும் தன் வாழ்­நாள் முழு­வ­தும் ஓயாது உழைத்த தலை­வர் கலை­ஞர் ஓய்வு கொள்­ளும் இடத்தை ஒரு வர­லாற்­றுச் சின்­ன­மா­கக் கட்­டி­ய­மைக்க வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் திரா­விட மாடல் அரசு அதற்­கான செயல்­திட்­டங்­களை வகுத்­தது. ஆறா­வது முறை­யாக ஆட்­சிக்கு வந்த திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு தொடங்­கிய இந்­தப் பணி, தலை­வர் கலை­ஞ­ரின் ஆறாம் ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்வு வரு­வ­தற்கு முன்­பாக நிறை­வ­டைந்­துள்­ளது. எதை­யும் தாங்­கும் இத­யத்­து­டன் பேர­றி­ஞர் அண்ணா துயில் கொள்­ளும் சதுக்­க­மும் புதுப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இரு பெரும் தலை­வர்­க­ளால் நம் இனிய தமிழ்­நாடு பெற்ற பயன்­களை வாழும் தலை­மு­றை­யும், வருங்­கா­லத் தலை­மு­றை­யும் அறிந்­து­கொள்­ளும் வகை­யில் அறி­வி­யல் தொழில்­நுட்­பத்­து­டன் இணைந்த வர­லாற்­றுச் சின்­ன­மாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன பேர­றி­ஞர் அண்ணா – முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஓய்வு கொள்­ளும் இடங்­கள். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் நினை­வி­டம் அருகே அமைக்­கப்­பட்­டுள்ள நில­வ­றை­யில் பய­ணித்­தால், கலை­ஞர் வாழ்ந்த காலத்­தில் நாமும் பய­ணிப்­பது போன்ற உணர்வு ஏற்­ப­டும். தலை­வர் கலை­ஞ­ரு­ட­னேயே பய­ணிப்­பது போன்ற அனு­ப­வம் கிடைக்­கும். அவர் பெற்­றுத் தந்த செம்­மொ­ழித் தகுதி, அவர் உரு­வாக்­கிய கணி­னிப் புரட்சி, அவர் கட்­ட­மைத்த நவீ­னத் தமிழ்­நாடு, அவ­ரு­டைய படைப்­பாற்­றல், அவ­ரது நிர்­வா­கத்­தி­றன், இந்­தி­யத் தலை­வர்­க­ளின் பாராட்­டு­த­லைப் பெற்ற கலை­ஞ­ரின் ஆளுமை உள்­ளிட்ட அனைத்­தும் சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் பணியை நிறை­வேற்ற அல்­லும் பக­லும் உழைத்த பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் மாண்­பு­மிகு எ.வ. வேலு அவர்­க­ளின் அர்ப்­ப­ணிப்­பு­மிக்க உழைப்­பை­யும், அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்த அரசு அதி­கா­ரி­கள் மற்­றும் பல்­வேறு துறை­யி­ன­ரின் ஒத்­து­ழைப்­பை­யும் மறக்க முடி­யாது.

தமி­ழி­னத்­தின் உயர்­வுக்­காக அய­ராது உழைத்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ருக்­காக இரவு – பக­லாக உழைத்­தும், தங்­கத்­தைப் போல இழைத்­தும் கலை­ந­யத்­து­டன் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது இந்த நினை­வி­டம். என்­றென்­றும் நெஞ்­சில் வாழ்ந்து, நம்மை இயக்­கக்­கூ­டிய தலை­வ­ரின் ஓய்­வி­டம் வியக்க வைக்­கும் வகை­யில் உரு­வாக்­கப்­பட்டு, பிப்­ர­வரி 26-ஆம் நாள் திங்­கட்­கி­ழமை மாலை 7 மணி­ய­ள­வில் திறந்து வைக்­கப்­ப­டு­கி­றது. தமிழ்­நாட்­டிற்கு ஒளி தந்த ஞாயி­றான நம் கலை­ஞ­ரின் ஓய்­வி­டம், திங்­கள் மாலை­யில் திறந்து வைக்­கப்­ப­டும் நிகழ்­வில், அவ­ரின் உயி­ரி­னும் மேலான உடன்­பி­றப்­பு­க­ளாம் நீங்­கள் கலந்து கொள்ள வேண்­டும் என உங்­க­ளில் ஒரு­வ­னான நான் உரி­மை­யு­ட­னும் உள்­ளன்­பு­ட­னும் அழைக்­கின்­றேன். “எழுந்து வா.. எழுந்து வா..” என்று கோபா­ல­பு­ரம் இல்­லத்­தின் முன்­பும், காவிரி மருத்­து­வ­மனை அருகே உள்ள சாலை­க­ளி­லும் நின்று முழக்­க­மிட்ட உடன்­பி­றப்­பு­கள் நீங்­கள்­தானே..! உங்­க­ளின் குரலை இப்­போது கடல் அலை­கள் அன்­றா­டம் முழக்­க­மி­டு­கின்­றன. பேர­றி­ஞர் அண்­ணாவை எழுந்து வரச் சொன்­னார் தலை­வர் கலை­ஞர். அண்ணா வர­வில்லை. கலை­ஞரை எழுந்து வரச் சொல்­கின்­றன அலை­கள். அவ­ரின் ஓய்வு நிறை­வ­டை­ய­வில்லை. தன்­னால் வர இய­லா­விட்­டா­லும், தன் உடன்­பி­றப்­பு­கள் நிச்­ச­யம் வரு­வார்­கள் என்­ப­தைத் தலை­வர் கலை­ஞர் அறி­வார். தலை­மு­றை­கள் கடந்த தலை­வ­ரான நம் கலை­ஞர், தமிழ் அலை­க­ளின் தாலாட்­டில், தன் அண்­ண­னின் தலை­மாட்­டில் ஓய்­வெ­டுக்­கி­றார். அவ­ரைக் காண வங்­கக் கட­லோ­ரம் வருக உடன்­பி­றப்பே! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.