தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு முழுக்க திமுகவினர் சார்பாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1 மார்ச் 1953ல் பிறந்தார். தமிழ்நாடு முதல்வராக இருக்கும் ஸ்டாலின் 28 ஆகஸ்ட் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியின் தலைவராகவும் உள்ளார். 1996 முதல் 2002 வரை சென்னையின் 45வது மேயராகவும், முதல் துணை முதல்வராகவும் பணியாற்றினார். ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாவது மகனாவார், கருணாநிதி மனைவி தயாளு அம்மாளுக்குப் பிறந்தவர். 1953 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஸ்டாலின் பிறந்தார். ஸ்டாலின் பிறந்த நான்கு நாட்களில் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மரணம் அடைந்தார். இதற்கான இரங்கல் கூட்டத்திலும் கருணாநிதி உரையாற்றினார். இதன் நினைவாக அவர் தனது குழந்தைக்கு ஸ்டாலின் பெயரை வைக்க முடிவு செய்தார். ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அவர் விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய ப்ரீ காலேஜ் படிப்பை முடித்தார். மேலும் 1973 இல் சென்னை பல்கலைக்கழகத்தின் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் வரலாற்றுப் பட்டம் பெற்றார். ஸ்டாலினுக்கு 1 ஆகஸ்ட் 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு முழுக்க திமுகவினர் சார்பாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுகவினர் சார்பாக ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நின்று தமிழ்நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் ‘திராவிட நாயகர்’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் என்று திமுக ஐடி விங் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. தடுமாறிக்கொண்டு இருந்த தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிர செய்த தலைமகன் என்று திமுகவினர் பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுக்க திமுகவினர் சார்பாக இன்று இனிப்புகள் கொடுத்து ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாப்பட உள்ளது. சில இடங்களில் சிறப்பு கூட்டங்களும் இதற்காக நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். இதை அடுத்து வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.