தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது எஸ்.பி.ஐ.!

தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று எஸ்.பி.ஐ சமர்பித்துள்ளது.

தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதை செயல்படுத்த நிறைய காலஅவகாசம் தேவைப்படும் என்றும், எனவே, ஜூன் 30-ந் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 6 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை நிராகரித்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை சமர்பிக்க உத்தரவிட்டு இருந்தது. இதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.