மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் பலத்த காயம் அடைந்ததாக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி) கட்சி அறிவித்துள்ளது.

மம்தா பானர்ஜியின் காயம் பற்றிய செய்தியை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் மம்தா பானர்ஜி நெற்றியில் இரத்தம் வழியும் அவரது படம் வெளியாகி உள்ளது. “எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி பெரிய காயம் அடைந்தார். தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.