ஆபாச படங்களை வெளியிட்ட 18 ஓடிடி தளங்கள் முடக்கபட்டுள்ளது.
ஓடிடி தளங்களில் அவ்வப்போது ஆபாச காட்சிகள் வெளியிடப் படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஆபாச படங்களை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இணைந்து செயல்பட்டு வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகள் இனி இந்தியாவில் செயல்படாது. மகளிர் மற்றும் குழந்தைகள் உரிமைகள் சார்ந்த நிபுணர்களிடம் கருத்து பெறப்பட்டு, பிற அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.