மீனவர்களின் நலனின் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி: எல். முருகன்

தமிழர்கள் நலனிலும் மீனவர்கள் நலனிலும் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்று அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர், அங்கிருந்து கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை வரவேற்று பேசிய அமைச்சர் எல். முருகன், தமிழர்கள் நலனிலும் மீனவர்கள் நலனிலும் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்று கூறியுள்ளார். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை ஒரே ஒரு போன் மூலம் உயிரை காத்தவர் பிரதமர் மோடி என்றும் அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே அரசு பாஜக அரசு. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடைபெறவில்லை என்றும் அமைச்சர் எல். முருகன் கூறினார்.