அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுக்கள் திண்டுக்கல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் தள்ளுபடியானது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ததில், கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அங்கித் திவாரியின் தந்தை, அவரது சகோதரர் ஆகியோர் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அங்கித் திவாரிஜாமீன் பெறத் தேவையான ஆவணங்களை நேற்று சமர்ப்பித்தனர். இதையடுத்து, வேலைநாட்களில் தினமும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி மோகனா உத்தரவிட்டார்.