இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த சதி: பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது!

இந்தியாவுக்குள் பயங்கரவாத தக்குதல் நடத்தும் சதித்திட்டத்துன், போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்கள் போல சட்ட விரோதமாக இந்தியா-நேபாள எல்லை வழியாக ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானியர்களை உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்கள் முலம் இந்தியர்கள் போன்ற அடையாளத்துடன் இந்தியாவுக்கு ஊடுருவியர்களையும் அவர்களுக்கு உதவிய நபரையும் ரகசிய தகவலின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு படை பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலப்ஜா சவுத்ரி கூறியதாவது:-

ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் பயிற்சி முகாமில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ- உதவியுடன் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. நேபாள எல்லை வழியாக இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திற்குள் அவர்கள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, எலக்ட்ரானிக் முறையிலும் நேரடியாகவும் கண்காணிப்பு மேற்கொண்டோம். அப்போது இந்தியா – நேபாள எல்லையை ஒட்டியுள்ள சோனவுலி என்ற கிராமத்தில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த ஒருவர் என மொத்தம் மூன்று பேர் பிடிபட்டனர். கைதானவர்கள் முகம்மது அட்லப் பாட், சையது கஜ்னஃபர் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், முகம்மது அட்லப் பட் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தில் ஐ.எஸ்.ஐ அமைப்பு உதவியுடன் உதவி பெற்றவர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.