தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு- கேரளா எல்லை சாலைகளை அடைக்க முடிவு!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கம்பத்தில் நடைபெற்ற இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று எல்லை சாலைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு- கேரளா இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தேனி, இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் வாக்களிப்பதை தடை செய்தல், எல்லைப் பகுதியில் மதுபானங்கள் கடத்தலை தடுப்பது, தகவல்களை இரு மாநில அதிகாரிகள் பரிமாறிக்கொள்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே. விஷ்ணு பிரசாத், தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, பெரியாறு புலிகள் சரணாலய காப்பாளர் ஷரிக் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.