தமிழகத்தில் ஏப்ரல் 17ல் மாலை 6 மணிக்கு பிரச்சாரம் ஓய்கிறது!

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளில் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். வழக்கமாக மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இந்த முறை மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல கட்சிகள் பாடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்தல் நாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் ஓயும். அந்த வகையில் வரும் 17ஆம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. வழக்கமாக மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓயும். ஆனால் இந்த முறை கோடை வெயிலை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. அதன்படி 17ஆம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் ஓய்கிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும் நாளை மாலையுடன் பூத் சிலிப் வழங்கும் பணிகள் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.