அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை: தேஜஸ்வி யாதவ்!

இந்திய அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் பாஜகவுக்கு இல்லை என பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-

இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அது குறித்து மீண்டும் மீண்டும் பேசிவருகிறது. பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு இது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த யரோ ஒரு பாபா எழுதியது அல்ல. இதனை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. பிகார் மாநிலத்திலும் பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அரசியலமைப்பை நீங்கள் அழிக்க நினைத்தால், மக்கள் உங்களை அழித்துவிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.