தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரி சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சூரியகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் விளக்க மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே ஆட்சேபம் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பாக விளக்க மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு இறுதி அவகாசம் விதித்து விசாரணையை ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.