அரசியல் கட்சியினர் தமிழகத்தில் தண்ணீர் பந்தலை திறக்க தடை இல்லை என்று விளக்கமளித்துள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு, அந்த நிகழ்வை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சத்திய பிரத சாகு வெளியிட்டுள்ள செய்தியில், தண்ணீர்பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட முன்மொழிவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்தச் செயல்பாட்டின் மூலமாக எந்த விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது எனவும், தண்ணீர் பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.