நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி குறித்து பேசுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிறுத்தி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
”தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரை திட்டுவதை ஏன் நிறுத்தினார்” என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பிய நிலையில், ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி பேசினார். அப்போது, உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்ததாக குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி அதானியின் பெயரை குறிப்பிட்டு பேசுவதில்லை என்று நரேந்திர மோடி இன்று கூறினார். ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் அதானி பற்றி பேசுகிறார், அவர் தினமும் அதானி பற்றிய உண்மையை உங்கள் முன் வைக்கிறார், அதை அம்பலப்படுத்துகிறார் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
நரேந்திர மோடிக்கு பெரிய தொழிலதிபர்களுடன் கூட்டணி இருப்பதாக ராகுல் காந்தி தினமும் உங்களிடம் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களுக்கு ரூ 16 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளின் ஒரு ரூபாயைக் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதில் சொல்ல வேண்டும் என பிரியங்கா காந்தி கூறினார்.
முன்னதாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதி இருந்து தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசுவதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு டெம்போ லோடுகளில் பண, வந்து சேர்ந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார் மேலும் தொழிலதிபர்கள் அம்பானி-அதானியை திட்டுவது ஒரே இரவில் நிறுத்தப்பட்டதில் என்ன ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது? என்றும் நரேந்திர மோடி சந்தேகம் கிளப்பினார்.