பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமை, இன்று வியாழக்கிழமை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ராஃபாவில் இருந்து கடந்த 3 நாள்களில் இடம்பெயர்ந்ததாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காஸாவின் தெற்குப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை விரிவிப்படுத்தியுள்ளதால் அங்குள்ள மக்களை இடம்பெயரச் சொல்லி அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைய தொடங்கிய மே 6-ம் தேதி முதல் 80 ஆயிரம் பேர் ராஃபாவில் இருந்து, வேறு புகலிடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை எனவும் முகமை கவலையை வெளிப்படுத்தியுள்ளது.