சமத்துவத்தை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்: ராகுல் காந்தி!

“கோடீஸ்வரர்களிடமிருந்து டெம்போக்களில் பெற்ற பணத்தை சிலர் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், சமத்துவத்தை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அம்பானி, அதானியிடமிருந்து காங்கிரஸ் கட்சி டெம்போவில் பணம் பெற்றது என்ற மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த பத்து ஆண்டுகளாக டெம்போவில் கோடீஸ்வரர்களிடம் இருந்து பெற்ற பணத்தினை அவர்கள் (பாஜக) எண்ணிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் சமத்துவத்தை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் நாட்டை எக்ஸ்- ரே செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் விளப்பரம் ஒன்றையும் அவர் பகிரிந்துள்ளார்.