அமித் ஷா தொடர்ந்த ராகுல் மீதான மானநஷ்ட வழக்கு மே 27-ல் விசாரணைக்கு வர உள்ளது.
“கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பாஜகவின் தலைவராக உள்ளார்” என்று மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து 2018-ல் நடந்த கர்நாடக பேரவை தேர்தலின்போது, பெங்களூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். இதையடுத்து, அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறு பரப்பியதாகக் கூறி அவர் மீது பாஜக தலைவர் விஜய் மிஷ்ரா மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஆண்டில் ராகுலுக்கு நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகி ராகுல் ஜாமீன் பெற்றார்.சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மாற்றப்பட்ட நிலையில், இவ்வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்தது. புதிய நீதிபதி நியமிக்கப்பட உள்ள நிலையில், மே 27-ல் இவ்வழக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.