உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு நாளைமுதல் (மே 16) 7 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குகின்ற காரணத்தினால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச் சிகரம் ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 20-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தொட்டபெட்டாவும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
இந்த நிலையில், உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு நாளைமுதல் (மே 16) 7 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனைச்சாவடியை மாற்றியமைக்கும் பணி நடைபெறுவதால் மே 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.