+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவியை வாழ்த்திய லாரன்ஸ்!

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமூகத்திற்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். தற்போது இவர், +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை மாணவி நிவேதாவிற்கு மோதிரத்தை பரிசளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி இருந்தனர். இதில் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி, மே 6ஆம் தேதியன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், சென்னை லேடி வெல்லிங்டன் பள்ளியில் பயின்ற நிவேதா என்கிற திருநங்கை, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி இருந்தார். இதில், 600-க்கு 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். தனக்கு பள்ளியில் படிக்க இடம் கிடைப்பதே சிரமமாக இருந்து. தனக்காக போராடி இடம் வாங்கிக்கொடுத்தவர்களுக்கும், எனது கல்விக்காக உதவி செய்த ஆசிரிய பெருமக்களுக்கு நன்றி கூறிய நிவேதா, நீட் தேர்வைவை எழுதி இருக்கும் நிவேதா, எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது கனவு என கூறியிருந்தார்.

இந்நிலையில், திருநங்கை மாணவி நிவேதா, லாரன்சை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தேன். இதைப்பார்த்த லாரன்ஸ் அண்ணா என்னை வீட்டுக்கு அழைத்து எனக்கு வாழ்த்து சொன்னது மட்டுமில்லாமல், தங்க மோதிரத்தை பரிசாக கொடுத்தார். இது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் எனக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இருந்தது என்றும மாணவி நிவேதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.