சுவீடன் நாட்டில் உள்ள நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பார்வையிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சுவீடன் நாட்டில் உள்ள பொது நூலகத்தைப் பார்வையிட்டோம். தொழில்நுட்ப வசதிகளும், பல்வேறு துறை சார்ந்த நூல்களும் இங்கு நிறைந்திருக்கிறது.
“நூலகர்கள்-வாசகர்கள்-எழுத்தாளர்களுக்கு இடையேயான உறவுகள் செழுமைப்பட வேண்டும்” எனும் நோக்கத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்நூலகத்தின் பல்வேறு தளங்களைப் பார்வையிட்டது புதிய அனுபவத்தை வழங்கியுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.
மேலும், சுவீடன் நூலகத்துக்குச் சென்ற புகைப்படங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.