ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காஷ்மீரில் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 10-வது சர்வதேச யோகா தினம், வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. காஷ்மீரை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக காஷ்மீர் செல்கிறார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.