கர்நாடகாவில் வசிப்போர் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா

கர்நாடகாவில் வாழும் அனைவரும் கட்டாயம் கன்னட மொழியை கற்க‌ வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் கன்னட தாய் புவனேஸ்வரியின் வெண்கலச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கர்நாடக முதல்வர் சித்தரா மையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதாவது:-

அகன்ற கர்நாடகாவில் வாழும் மக்கள் எந்தமொழியை பேசினாலும் அவர்கள் கன்னடர்கள்தான். இங்கு வாழும் அனைவரும் கட்டாயம் கன்னட மொழியை கற்க‌ வேண்டும். கன்னடர்கள் பிற‌மொழியினருக்கு கன்னடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். கன்னடர்களும் கன்னட மொழியை செம்மையாக கற்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் கற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.