நீட் வினாத்தாள் கசிவு: டெல்லியில் மாணவர் அமைப்பினர் போராட்டம்!

டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் மாணவர் அமைப்பினர் புகுந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டம். தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் நீட் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். NTA மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம், நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக அகில இந்திய மாணவர் அமைப்பும் (ஏஐஎஸ்ஏ) போராட்டம் நடத்தி வருகிறது.

இந்திய மாணவர் அமைப்பின் இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா ராம் சிங் கலந்து கொண்டார். போராட்டத்தின்போது மாணவ அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் நீட் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்.

நீர் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் மீது சந்தேக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகாரில் வெளியான வினாத்தாள் ஜார்கண்டில் இருந்து கிடைக்கப்பெற்றதாகவும் தனடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.