சதிகார கும்பலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி கோட்டையில் கழக கொடியை பறக்க விட்ட பொன்னாள் என்று ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஏழைகளின் ஏற்றமே நாட்டின் முன்னேற்றம் எனக் கருதி ஏழை எளியோரின் வலியுணர்ந்து வாரி தந்த வள்ளல். தமிழ்நாட்டை சுயநலத்திற்காக சூறையாட நினைத்த சதிகார கும்பலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி கோட்டையில் கழக கொடியை பறக்க விட்ட பொன்னாள். பொன்மனச் செம்மல் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி கண்ட தமிழினத்தின் திருநாள்!
30.06.1977-ல் முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்று 11-ஆண்டுகள் கடைக்கோடி மக்களுக்காகவே கழக ஆட்சியை தந்தவர் நம் தங்கத்தலைவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வார்த்தை வரிகளுக்கு ஏற்ப நூறாண்டு தாண்டி நூற்றாண்டு கண்டாலும் மண்ணிலும் மக்கள் மனதிலும் மாற்றமுடியாத இயக்கமாக இருக்கும்! இயங்கும்! என்றென்றும் எம்.ஜி.ஆர். இவ்வாறு ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.