காசா மீதான தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா மருத்துவமனைகளில் எரிபொருள் நெருக்கடி நிலவி வரும்நிலையில், மருத்துவமனைகளுக்குள் பல துறைகளில் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிக்கன நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை மற்றும் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து கிழக்கு காசா நகரத்திலிருந்து சுமார் 80,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட ஐந்து ஊடகவியலாளர்களின் பெயர்கள் காசா அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர் என்று காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,098 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87,705 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான அமெரிக்காவின் பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்ததைத் தொடா்ந்து காசாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் அனுமதி பெற்று 16 நாள்களில் அடுத்தக்கட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதோடு, இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று ஹமாஸ் தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டதாகவும் அடையாளம் வெளியிட விரும்பாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் போர் நிறுத்தம் குறித்தும் கைதிகள் பரிமாற்றம் குறித்தும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்திருந்தன் மூலம் காசா போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதி ஏற்படுத்தும் சர்வதேச அமைப்பு, தற்காலிக போர் நிறுத்தம், உதவிகள் விநியோகம், இஸ்ரேல் படைகள் திரும்பப்பெறுதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்திருப்பதாக இவை நடந்தால் மட்டுமே இரண்டாம் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடா்ந்து காசாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபா் ஜோ பைடனைத் தொடா்பு கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் போா் நிறுத்தம் குறித்தும் கைதிகள் பரிமாற்றம் குறித்தும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக உறுதியளித்தாா்.