சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகமும் தேர்வு!

நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐஐடியும், சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் NIRF அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசை பட்டியல்களை வெளியிட்டு உள்ளது. ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, மருந்தகம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், புதுமை, மாநில பல்கலைக்கழகம், திறன் பல்கலைக்கழகம் மற்றும் திறந்த நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 வெவ்வேறு பிரிவுகளுக்கான தரவரிசைகள் இதில் அடங்கும்.

புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இந்த ஆண்டு, ஒட்டுமொத்தப் பிரிவில் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தை தக்கவைத்து உள்ளது. ஐஐஎஸ்சி பெங்களூர் இரண்டாவது இடத்தையும், ஐஐடி பாம்பே மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளது.

நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள்:-

* ஐஐடி மெட்ராஸ்
* ஐஐஎஸ்சி பெங்களூரு
* ஐஐடி டெல்லி
* ஐஐடி கான்பூர்
* ஐஐடி காரக்பூர்
* எய்ம்ஸ், புது தில்லி
* ஐஐடி ரூர்க்கி
* ஐஐடி குவஹாத்தி
* ஜேஎன்யு, புதுடெல்லி
* அண்ணா பல்கலைக்கழகம்

மாநில பொதுப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் என்ற புதிய பிரிவும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தையும், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் புனேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்து உள்ளன.