நிதி நிறுவனத்தில் ரூ 525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி இயக்கத் தலைவர் தேவநாதன் யாதவ் திருச்சியில், சென்னை குற்றபிரிவு போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் தேவநாதன் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தின் தலைவராக தேவநாதன் இருந்து வருகிறார். அவர் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை ரூ. 525 கோடிக்கு ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.