கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றிருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா உணவக உரிமையாளர் பேசியிருந்த விஷயம் பெரும் கவனம் பெற்றிருந்தது. இது குறித்து அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்துள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் எப்போதுமே கடுகடு என்றுதான் இருப்பார் என கார்த்திக் சிதம்பரம் சாடியுள்ளார்.
பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஒரு மாதிரியான ஜிஎஸ்டி குறித்து வலியுறுத்தியிருந்தார். அவர் பேசியதாவது, “உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள வானதி சீனிவாசன் எம்எல்ஏ எங்களுடைய ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க. ஸ்வீட்டுக்கு ஐந்து சதவீதம், உணவுக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் உள்ள வைக்குற கீரீம்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கிறது. அவங்க வரும்போதெல்லாம் ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி, காரம் சாப்பிடுவது, காரத்துக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என தினசரி நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி கொடுப்பது கஷ்டமாக உள்ளது. பண்ணுக்கு ஜிஎஸ்டி கிடையாது, அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி என்பதை பார்க்கும் வாடிக்கையாளர்கள், பன்னை கொண்டா.. அதில் கிரீமை நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள். ஆணவம்.. அவமரியாதை.. அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி விளாசல் கடை நடத்த முடியவில்லை மேடம். இனிப்புக்கு குறைவாக ஜிஎஸ்டியும், காரத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை, ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் மறுநாள், அதாவது செப். 12ம் தேதி சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும், “கேள்வி கேட்டால் மன்னிப்பு கேட்க சொல்வீர்களா?” என்று கொந்தளித்தனர். அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என்று ராகுல் காந்தி, கார்கே, ஜோதிமணி என அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், நிதியமைச்சரை கடுமையா விமர்சித்துள்ளார். அதாவது, “பொதுவாகவே இந்த அமைச்சர் (நிர்மலா சீதாராமன்), மக்கள் மத்தியில் பேசும்போதும் சரி, நாடாளுமன்றத்தில் பேசும்போதும் சரி இப்படித்தான் இருப்பார். சிரித்த முகத்துடன் எளிதாக பேசக்கூடியவர் அல்ல. எதுக்கெடுத்தாலும் கோபப்படுவார், இரிட்டேட் ஆவார். சில சமயங்களில் சில விஷயங்கள் அவருக்கு தெரிவதில்லை. இதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மறைப்பதற்கு கோப்படுகிறார். அதிலும் குறிப்பாக அன்னபூர்ணா உரிமையாளர் நறுக் என கேள்வி கேட்டது அவருக்கு ஈகோ டச் ஆகியிருக்கும். எனவேதான் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.