ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (SCO) பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அக்.15,16 தேதிகளில் பாகிஸ்தனுக்கு செல்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்கெனவே பல பிரச்னைகள் இருக்கின்றன. உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, எதிர்க்கட்சிகளை கொம்பு சீவி விடுவதை போன்ற வேலைகளை பாகிஸ்தான் செய்து வருந்திருக்கிறது. எனவே இந்தியா பாகிஸ்தானை பெரியதாக கண்டுக்கொள்வதில்லை. இப்படி இருக்கையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார். அதாவது ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறும். இந்த முறை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. எனவே இதில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இந்தியா தவிர, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் உறுப்பினராக இருப்பதால், இந்த நாடுகளை சேர்ந்த தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
அக்டோபர் 15,16 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடக்கிறது. இதில், உறுப்பு நாடுகளுக்கிடையே நிதி, பொருளாதார, சமூக கலாச்சார மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்படும். ஆனால், உண்மையில் சமீப ஆண்டுகளாக இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மீது பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. காரணம், சீனா மற்றும் பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கம்தான். எல்லை பிரச்னையில் இரு நாடுகளும் இந்தியாவுக்கு போதிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. மட்டுமல்லாது, காங்கிரஸ் ஆட்சியில் பின்பற்றப்பட்ட வெளியுறவுத்துறை கொள்கைகள் தற்போது மாற்றப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இந்த நாடுகளுக்கு எல்லாம் பெரிய எதிரி. எனவேதான் இந்த அமைப்புடன் இந்தியா பெரியதாக தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.
மறுபுறம் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வதால் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். அவருக்கு பிறக்கு தற்போது ஜெய்சங்கர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.