பூர்விகா உரிமையாளர் வீட்டில் 3ஆவது நாளாக ரெய்டு!

செல்போன்களை விற்பனை செய்யும் பூர்விகா நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறையினர் 3ஆவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள். அது போல் பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

செல்போன்கள், ஐபோன்கள், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன், ஏர் டோப்ஸ், இயர் பாட்ஸ் என பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை பூர்விகா விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. இங்கு குறைந்த விலையில், எளிய தவணை முறையில் செல்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அது போல் செல்போன்களுக்கு நிறைய ஆஃபர்களையும் இந்த கடை அள்ளி வழங்குகிறது. இதனால் இந்த கடைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. இந்த கடையில் ரூ. 600 க்கு கூட செல்போன் கிடைக்கும். இந்த நிலையில் பூர்விகா நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் பூர்விகா உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது.

நேற்று காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள யுவராஜின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. அது போல் பல்லாவரம், பள்ளிக்கரணை பகுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது. 3 கார்கள் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். சோதனையில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் (அக்டோபர் 17) தொடங்கிய இந்த சோதனை நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. அது போல் 3ஆவது நாளாக இன்றும் பூர்விகா உரிமையாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.