தமிழக ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையது அல்ல என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆளுநர் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்துப்பாடல் தவறாகப் பாடப்பட்டது ஏற்புடையதல்ல. இனிவரும் காலங்களில் நிகழ்ச்சி நடத்துவோர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். தேசிய கீதம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது போல், தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற பிழைகள் இல்லாதவாறு பாடுவதற்கு சரியாக, முறையாக ஒத்திகை நடத்தப்பட வேண்டும். நிகழ்ச்சி நடத்துவோர் ஒத்திகை நடத்தி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை சரியாகப் பாடி தமிழுக்கு உரிய பெருமை சேர்க்க வேண்டும். எனவே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடுவதே தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.