அமலாக்கத்துறை வழக்கில் நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆஜரானார். இதில், விசாரணைக்கு ஆஜராகியிருந்த தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

இதையடுத்து செந்தில்பாலாஜி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்க துறை தொடர்ந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு கடந்த 4 ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்க துறை சாட்சியான மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார். விசாரணைக்கு ஆஜராகியிருந்த தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கவுதமன் குறுக்கு விசாரணை நடத்தினார். அன்றைய தினம் குறுக்கு விசாரணை நிறைவடையவில்லை. இதையடுத்து, விசாரணையை வரும் 29ம் தேதிக்கு(நேற்று) நீதிபதி தள்ளிவைத்தார்.

அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார். விசாரணைக்கு ஆஜராகியிருந்த தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் ஆஜரானார். அவரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கவுதமன் குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை இன்றும் நிறைவடையததை அடுத்து விசாரணையை நவம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.