நீதிக்கட்சியின் வாரிசுகளாக உரிமைகளை மீட்க உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் தொடர்ந்து உழைப்பை செலுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த நீதிக்கட்சி கடந்த 1916 நவம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்டது. அக்கட்சி உருவான தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கி சமூக நீதி புரட்சி. இலவச கட்டாய கல்வி மற்றும் காலை உணவு திட்டத்தை முன்னோடியாக தொடங்கி கல்வி புரட்சி. இந்து சமய அறநிலைய சட்டம் மூலம் சமத்துவ புரட்சி என, நூற்றாண்டுகளுக்கு முன்பே, இன்றைய திராவிட மாடலுக்கு பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள்.

உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய் பிறந்த நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பை செலுத்துவோம். வெல்வோம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.