நீலகிரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பினார் குடியரசு தலைவர்!

நீல​கிரி மாவட்​டத்​தில் 4 நாட்கள் சுற்றுப்​பயணம் முடிந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி திரும்​பினார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரி​யில் அதிகாரி​களுடன் கலந்​துரை​யாடல் உள்ளிட்ட நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்​வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்​பயணமாக கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தார்.

உதகை ராஜ்பவனில் தங்கி​யிருந்த அவர், கடந்த 28-ம் தேதி முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி​யில் நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் அதிகாரி​களுடன் கலந்​துரை​யாடி​னார். மேலும், போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கான நினை​வுத்​தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்​தினார். போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்​தினருக்கு விருது வழங்கி கவுர​வித்​தார்.

இதையடுத்து, நேற்று முன்​தினம் மாலை நீலகிரி மாவட்டத்​தில் வாழும் 6 வகையான பண்டைய பழங்​குடியின மக்களை உதகை ராஜ்பவனில் சந்தித்​தார். அப்போது, பழங்​குடியின மக்கள் அமைத்​திருந்த அரங்​கு​களில் இருந்த, பழமையான பொருட்கள் குறித்து ஆர்வ​முடன் கேட்​டறிந்​தார். மேலும், பழங்​குடியின மக்களின் நடனங்களை கண்டு ரசித்தார். முடி​வில் அவர்​களுடன் குழு புகைப்​படம் எடுத்​துக்​கொண்டு, உணவருந்தினார். தொடர்ந்து, உதகை ராஜ்பவன் மாளி​கை​யில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மரக்​கன்று நட்டு, தண்ணீர் ஊற்றினார். அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்​.ரவி, அவரது மனைவி லட்சுமி, பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்​யநாதன் ஆகியோர் உடனிருந்​தனர்.

இந்நிலை​யில், 4 நாட்கள் சுற்றுப்​பயணம் முடிந்து குடியரசுத் தலைவர் நேற்று காலை உதகை ராஜ்பவன் மாளிகை​யில் இருந்து கார் மூலம் கோத்​தகிரி, மேட்டுப்​பாளை​யம், அன்னூர் வழியாக கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்​பினார்.

முன்ன​தாக, ராஜ்பவன் மாளி​கை​யில் ஆளுநர் ஆர்.என்​.ரவி, தமிழக அமைச்சர் மெய்​யநாதன், ஏடிஜிபி ஜெயராமன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்​பாளர் நிஷா ஆகியோர் குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்​தனர்.