பலரது உயிரை பறித்த கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் தமிழக காவல்துறை உரிய முறையில் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும். எனவே தமிழக காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.