ஆயிரக்கணக்கான மளிகை கடைகள் மூடப்பட்டு வருவது கவலை அளிக்கிறது: ராகுல் காந்தி!

Q வர்த்தகம்(Q commerce) காரணமாக ஆயிரக்கணக்கான மளிகை கடைகள் மூடப்பட்டு வருவது கவலை அளிப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள சமூக வலைதள பதிவில், அண்மையில் டெல்லியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு தாம் சென்றதை சுட்டிக் காட்டியுள்ளார். Q commerce எனப்படும் விரைவு வணிகம் காரணமாக ஆயிரக்கணக்கான மளிகை கடைகள் மூடப்பட்டு வருவது கவலை அளிப்பதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், தொழில்நுட்பம் மற்றும் புதுமைச் சமநிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

உலகத்தின் போக்கிற்கு ஏற்ப இந்திய பொருளாதாரம் மாற்றம் அடைந்து வரும் நிலையில், சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது மிக அவசியம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக டெல்லியில் மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி.