பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
பெரியார் சிலை உடைப்பு, அறநிலைத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாகப் பேசியது, திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாகப் பேசியது உள்பட 11 வழக்குகள் எச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் டிச. 2ல் நடைபெற்றது.
இதில் பெரியார் சிலை உடைப்பு மற்றும் கனிமொழி குறித்து அவதூறாகப் பதிவிட்ட இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து சிறைத் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.