விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினருக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜையில் கலந்துகொண்ட தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சசிகலா, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், பார்வர்டு பிளாக் கட்சி பி.வி.கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சி முகமது முபாரக், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், தே.மு.தி.க. நிர்வாகிகள்-தொண்டர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.