உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளை தாண்டிவிட்டது. இந்த சூழலில் ஐ.நா.பொது சபை கூடி ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து விவாதித்தது. உலகின் பல முன்னணி நாடுகளின் பிரதிநிதிகள் இந்த விவாதத்தில் பங்கேற்று தங்கள் நாடுகளின் நிலைப்பாட்டை விளக்கி கூறினர்.
பெரும்பாலான நாடுகள், போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.சபையை கேட்டுக் கொண்டனர்.
இதன் முடிவில் ரஷ்ய படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பதற்றத்தை குறைக்கவும் போர் நடவடிக்கைகளை நிறுத்தவும் வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஆனால் அமெரிக்க, ரஷ்ய, இஸ்ரேல் உள்ளிட்ட 18 நாடுகள் எதிராக வாக்களித்தன. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரம் இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.