முன்னாள் அதிபர் பைடன் விரைவில் குணமடைய மோடி வாழ்த்து!

புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புராஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது உலகத் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த புற்றுநோய் பாதிப்பு ஜோ பைடனின் எலும்புகளுக்கும் பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைடனுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜோ பைட ன் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடல்நிலை குறித்து அறிந்து மிகவும் கவலையடைந்தேன். அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.