லைப்ஸ்டைல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/health/life-style/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sun, 01 Sep 2024 05:16:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 லைப்ஸ்டைல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/health/life-style/ 32 32 201197430 தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்! https://koodal.com/health/2024/09/01/benefits-of-taking-oil-bath/ Sun, 01 Sep 2024 05:16:07 +0000 https://koodal.com/?p=64616 எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம், இன்றுவரை நம்மிடம் தொடர்ந்து வருகிறது. இதற்கும் அறிவியல் காரணம் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு. நம்முடைய உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும்.. இந்த தோலை முறையாக பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.. சித்தமருத்துவத்தில், தலைக்கு எண்ணெய்…

The post தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம், இன்றுவரை நம்மிடம் தொடர்ந்து வருகிறது. இதற்கும் அறிவியல் காரணம் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு. நம்முடைய உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும்.. இந்த தோலை முறையாக பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.. சித்தமருத்துவத்தில், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது முறையாக சொல்லப்பட்டுள்ளது. தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும்போது, சருமத்திலுள்ள அழுக்குகள் வெளியேறும்.. சருமத்துவாரங்களில் அழுக்குகள் இருந்தாலும், அதை போக்கும் தன்மை எண்ணெய் குளியலுக்கு உண்டு.. தொடர்ந்து எண்ணெய் தேய்த்து குளித்து வருபவர்களுக்கு சருமத்தில் எந்த பிரச்சனையும் வருவதில்லை.

எண்ணெய் தேய்த்து குளித்தால், உடலிலுள்ள உஷ்ணம் தணியும்.. நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.. தலைமுடி வலுவாகும்.. உடல் வலி அதிகமாக இருந்தாலும், அதனை எண்ணெய் குளியல் போக்கிவிடும்.. மூட்டு வலி, முழங்கால் வலி இருப்பவர்களுக்கும், எண்ணெய் குளியல் கை கொடுத்து உதவும். வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற பிரச்சனைகளிலுந்தும் தீர்வு கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக்குளிப்பதால் தோலில் பளபளப்பும் கிடைக்கிறது.. அதிலும் வறண்ட தோல் உள்ளவர்கள், கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.. உடல் சூடு உள்ளவர்களும் எண்ணெய் தேய்த்துக்குளிப்பதால் உடல் குளிர்ச்சியாகும். அதுவும், காலையில் எண்ணெய் தேய்ப்பதே சிறந்தது. காரணம், சூரியனிலிருந்து வரும் வைட்டமின் D சத்துக்கள் நமக்கு மிகவும் நல்லது..

ஆன்மீக ரீதியாக பார்த்தால், எந்தெந்த கிழமைகளில் குளிக்க வேண்டும் என்று வகைப்படுத்தி, அதற்கான நேரமும் குறிக்கப்பட்டுள்ளது.. அதாவது, ஆண்கள் புதன், சனி கிழமைகளில் குளிக்க வேண்டுமாம்.. காரணம், சனி பகவான் அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. அதனால், எண்ணெய் குளியல் மனிதர்களுக்கு அவசியம் என்கிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை.. அத்துடன், செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள் என்பதால், இந்த நாட்களில் கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதன்படி எண்ணெய் குளியல் என்றாலே, காலை 8 மணிக்கு முன்பு, அல்லது மாலை 5 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். புதன், சனிக்கிழமையில் குளிப்பதையே வழக்கப்படுத்தி கொள்ள வேண்டுமாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வமெல்லாம் போய்விடும் என்பார்கள்.

குடும்ப உறவுகளுக்கும், எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும்கூட நிறைய தொடர்பு இருக்கிறதாம்.. தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபடக்கூடாது.. அதேபோல, குளிப்பதற்கு தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. பெண்கள், தலையில் எண்ணெய் வைத்துவிட்டால் உடனே தலைமுடியை முடிந்து கொள்ள வேண்டும். தலைவிரி கோலமாக வீட்டில் நடமாட கூடாது.. அதேபோல பெண்கள் எண்ணெய் வைத்து தலைவிரி கோலத்தில் இருந்தால், வீட்டை விட்டு யாரும் வெளியே பயணிக்க கூடாது.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இந்த 3 எண்ணெய்களையும் சமமாக கலந்து தலைமுதல் கால் வரை ஊறவைத்து குளிக்கலாம்.. எண்ணெய் வைத்து குளிக்கும்போது, நம்மை பிடித்த தோஷங்களும் விலகும் என்பார்கள்.. அதேபோல, எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டால் அன்றைய தினம் வெளியில் அவ்வளவாக அலையக்கூடாதாம்.. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், இன்னும் சூடு சேர்ந்து உடல்நல தொந்தரவை தந்துவிடுமாம்.

The post தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
64616
அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? https://koodal.com/health/2022/05/25/are-you-ready-to-beat-the-heat/ Wed, 25 May 2022 10:34:34 +0000 https://koodal.com/?p=4268 அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்: ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி,…

The post அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்:

ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி, தூசி அடைத்துக் கொள்ளும். மேலே சொன்னவற்றை மாவு மிஷின் கடையில் கொடுத்து அரைத்து வைத்து, தினமும் காலை குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கடைகளில் விற்கும் “காஸ்ட்லி ஸ்கிரப்பர்”களை விட இவை உடலுக்கு மிக மிக நல்லது.

வைட்டமின் “டி” குறைபாட்டை சரிகட்டுங்களேன்!

காலை நேரங்களில் சுளீர் வெயில் தலைதூக்கத் துவங்கி விட்டது. முட்டி வலி, மூட்டு வலி உட்பட பல உபாதைகளும் நீங்க, இளங்காலை வெயில் மேலே படும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடமாவது வெயிலில் காலார நடந்து விட்டு வாருங்கள்.

வைட்டமின் “டி” சத்து குறைபாட்டால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர். சூரியன் நம் உடலில் பட்டால் மட்டுமே வைட்டமின் “டி” சத்து கிடைக்கும்; உணவு வகைகள் மூலம் வைட்டமின் “டி” சத்து கிடைப்பது மிக மிகக் கடினம். காசு செலவில்லாத சிகிச்சை இது. முயன்று பாருங்கள்!

கண்கள் சோர்வடையாமல் இருக்க:

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி சுத்தமான விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் தோல் மென்மையாகிவிடும்.

கோடை காலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு வளையமும் விழும். இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும்.

வெட்டி வேரை வாங்கி வையுங்கள். அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் அந்த இடமே குளிர்ச்சியாகும். இதை சுத்தப்படுத்தி பானை தண்ணீரில் போட்டு பருகினால் உடலுக்கு இதம் கிடைக்கும்.

ரத்த சந்தனம் வீட்டில் இருந்தால் உங்கள் சருமம் மாசு மரு இல்லாமல் இருக்கும். இதை அரைத்து கறுப்பு புள்ளிகள், படைகள் இருக்கும் இடங்களில் பூச வேண்டும்.

கற்றாழையை வளருங்கள். இதன் உள் இருக்கும் தசைப் பகுதியை தலையில் தேய்த்தால் முடி நன்றாக வளரும். சொறி, புண் போன்றவை இருக்கும் இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. தேவையான அளவில் உடலில் பூசினால் சருமத்திற்கு நிறம் தரும் பொருளாகவும் செயல்படுகிறது.

The post அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
4268
அறுபதிலும் அழகாய் இருக்க வேண்டுமா? https://koodal.com/health/2022/05/25/want-to-be-beautiful-in-your-sixties/ Wed, 25 May 2022 09:55:15 +0000 https://koodal.com/?p=4262 இளைய வயதினர் மட்டுமே உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருக்கலாம். வயதானவர்களாகிய நாம் இனி உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருந்து என்ன பயன்? என்று பலர் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் தவறாகும். இறைவன் அளித்த இந்த உடலை, இறுதி மூச்சு உள்ளவரையிலும் அழகாகவும்,…

The post அறுபதிலும் அழகாய் இருக்க வேண்டுமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இளைய வயதினர் மட்டுமே உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருக்கலாம். வயதானவர்களாகிய நாம் இனி உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருந்து என்ன பயன்? என்று பலர் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் தவறாகும். இறைவன் அளித்த இந்த உடலை, இறுதி மூச்சு உள்ளவரையிலும் அழகாகவும், அளவாகவும் வைத்திருக்க வேண்டும். வயதானவர்கள் இதில் அக்கறையும், முயற்சியும் செலுத்த முடியும்.

உடலை வருத்திப் பணியாற்றினால் உறுதியான உடற்கட்டும், நோயற்ற வாழ்வும் பெறலாம் என்ற பழமொழி இன்று பழங்கதையாக, பகற்கனவாக ஆகிவிட்டது. உடலுக்கு வேலை தராமல், உல்லாச வாழ்க்கை நடத்துவோரின் எண்ணிக்கை இன்று பன்மடங்காகப் பெருகிவிட்டது. தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், சினிமா, வாக்வம் கிளீனர், வாஷிங்மெஷின், இரு சக்கர வாகனங்கள், தொலைபேசி, அலைபேசி போன்ற அறிவியல் சாதனங்கள் மனித குலத்தைப் பெரிதும் மாற்றியமைத்து விட்டன. அறிவியல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்படாத அரைவை இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில் நெல்லை உரலில் போட்டு உலக்கையால் குற்றி அரிசியாக்கினார்கள். மாவு ஆட்டும் கல்லில் மாவு அரைத்தார்கள். தரையில் படிந்துள்ள அழுக்குகளைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்தார்கள். வேலைகளே அவர்களுக்கு உடற்பயிற்சிகளாக அன்று அமைந்து விட்டன. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணியாற்றும் ஆண்களும், பெண்களும், உடலை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். பரபரப்பும், சுறுசுறுப்பும் வேகமும் நிறைந்த இந்த உலகத்தில் மெதுவாகச் செல்பவர்கள் மிகக் குறைவு. காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடிக்கும் வரையிலும், அதன்பின் பேருந்தைப் பிடித்து அலுவலகத்தை எட்டும் வரையிலும், வீடு திரும்பும்போது ஜன நெருக்கடியில் சிக்கித் திணறி ஒரு வழியாக வீடு வந்து சேரும் வரையிலும் வேகம், வேகம், வேகம்தான். ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? என்று எண்ணுவதற்குக் கூட நேரமில்லாமல் போய் விட்டது.

பணி நிறைவு பெற்றவர்களாகிய நீங்கள் வீட்டிலே எவ்வளவு நேரம்தான் அடைந்து கிடப்பீர்கள்? கடைவீதி, நூலகம், பூங்கா என்று சென்றுவிட்டு வீட்டுக்கு வருகிறீர்கள். வீட்டுக்கு வந்தால் உங்களால் அமைதியாக இருக்க முடிகிறதா? பேரன் பேத்திகளின் தொல்லை ஒரு புறம். இல்லத்தரசியின் இனிய கர்ஜனை ஒரு புறம். மருமகள்களின் இடி முழக்கங்கள் ஒருபுறம்! இவைகளை மறக்க தொலைக்காட்சி முன்னால் அமர்கின்றீர்கள். சேனலை மாற்றி மாற்றிப் போடுகின்றீர்கள். எந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கின்றதோ, அந்த நிகழ்ச்சிக்குரிய சேனலைப் போடுகின்றீர்கள். இதிலும் பரபரப்பு காட்டுகின்றீர்கள். இந்தப் பரபரப்பு தேவைதானா?

மனிதர்களுக்கு அமைதி என்பது இல்லாமலேயே போய்விட்டது. இதனால் கணக்கில்லாத நோய்கள் மனிதர்களைத் தாக்கத் தொடங்கிவிட்டன. மனித வரலாற்றிலேயே என்றுமில்லாத அளவுக்கு இன்று இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

அரசியலில் போட்டி, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளில் போட்டி, அலுவலகத்தில் போட்டி, காணுமிடமெல்லாம் போட்டி என்று எங்கு பார்த்தாலும் போட்டி மனப்பான்மை மிகுந்திருப்பதால் மனிதர்களுக்கு உளவியல் பாதிப்புகள் மிகுந்துள்ளன. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நம்மை விட்டுப் போனதால் பிணிகள் நம்மை தொட்டுக் கொண்டு நிற்கின்றன. கட்டுக்கட்டாக பணத்தைச் செலவு செய்தாலும், சட்டென்று குணமாவதில்லை.

நீங்கள் நல்ல முறையில் அழகான உடலமைப்பைப் பெற்றுப் பிணியில்லாமல் வாழ வேண்டுமா? நான் சில எளிய உடற்பயிற்சிகளை இக்கட்டுரையில் கூறுகிறேன். இவைகளை நீங்கள் தினமும் ஒழுங்காகச் செய்து வந்தாலே போதும். நீங்கள் அழகாக இருக்கலாம். அளவோடு இருக்கலாம். தினம் தோறும் நீங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனதில் அமைதி கிடைக்கிறது. புதிய உற்சாகம் பிறக்கிறது. ரத்த ஓட்டம் சிரடைகிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உடலில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருந்தால், அது உடற்பயிற்சியின் மூலம் கரைகிறது. தேவையற்ற கொழுப்புச் சத்து குறைந்தாலே போதும், நீங்கள் அழகாக இருக்கலாமே!

கழுத்தில், இடுப்பில், தொடையில், வயிற்றில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடலின் அழகு உருக்குலைந்து விடும். மேலும் இந்தக் கொழுப்பு இதயத்தைப் பாதிக்கும் எமனாக வந்து சேர்கிறது. எனவே இந்தக் கொழுப்பை விரட்டியடிக்கும் பயிற்சியில் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். வயதானவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொழுப்பு சேர்ந்து விடும். இதை நீங்கள் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிகவும் சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. தினந்தோறும் அதிகாலையில் 4 அல்லது 5 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சியில் ஈடுபடலாம். சில ஆசனங்களைச் செய்தால் கொழுப்புச் சத்து கரைந்து விடும். ஆனால் அந்த ஆசனங்களை விட மிகவும் எளிமையான உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த உடற்பயிற்சிகளை நான் உருவாக்கிப் பல ஆண்டுகள் வரை பலருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். வயதானவர்கள் இப்பயிற்சிகளைச் செய்யும் போது, கணிசமான அளவுக்கு அவர்களுடைய எடை குறைந்து சுறுசுறுப்பு மேலோங்குவதைக் கண்டிருக்கிறேன்.

இந்த உடற்பயிற்சிகளை எந்தவிதப் பயமின்றி நீங்கள் இடைவிடாமல் செய்து வரலாம். முதலில் தொடையிலும், பின் பகுதியிலும் காணப்படும் அதிகமான கொழுப்பைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைப் பார்ப்போம்.

முதலில் நீங்கள் நேராக நின்று கொள்ளுங்கள். கால்களைக் கொஞ்சம் (1 அடி) அகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மாவீரன் போஸில் நின்று கொள்ளுங்கள். தலையை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகவும், வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகவும் மாற்றி மாற்றி 20 முறை செய்ய வேண்டும். இடப்பக்கத்தில் ஆரம்பியுங்கள். கொஞ்சம் தலையைத் தாழ்த்தி வலப்பக்கத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.

மீண்டும் இடது பக்கத்திற்குக் கொண்டு செல்லுங்கள். இது ஒன்று… இப்படியாக இருபது வரை செய்ய வேண்டும். இதை நிதானமாகச் செய்ய வேண்டும். அவசரம் அவசரமாக இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது.

அடுத்து நான் செய்ய மாட்டேன் என்ற பாவனையில், இடப்பக்கமிருந்து வலது பக்கத்திற்குத் தலையை ஆட்ட வேண்டும். அதையும் 20 முறை செய்ய வேண்டும். பெண்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் பிடிக்கும்.

அடுத்து மாவு ஆட்டும் கல்லில், கல்லானது வட்டமாகச் சுழன்று வருவதைப் போலத் தலையைச் சுழலச் செய்ய வேண்டும். இதை 10 முறை செய்தால் போதுமானது. நிதானமாகச் செய்ய வேண்டும். வேகம் கூடாது. செக்கு மாடு போலச் சுழன்று வர வேண்டும். ஆண்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் அழகாக வருமே!

அடுத்து தலையை இடப்பக்கமிருந்து நேராக வலப்பக்கம் சென்று மீண்டும் இடப்பக்கத்திற்குக் கொண்டு வாருங்கள், “கேட்க மாட்டேன்” என்ற பாவனையில். பின் அப்படியே தலையைத் தூக்கிப் பின் கீழே கவிழ்த்து மீண்டும் மேலே கொண்டு வாருங்கள். (அதாவது + வடிவத்தில் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்). 10 முறை செய்தால் போதுமானது. பெண்களுக்கு இந்தப் பயிற்சி அழகாக வருமே!

இடுப்பையும், பின் பகுதியையும் வலிமைப்படுத்தி வனப்பை நல்கும் உடற்பயிற்சிகள் உள்ளன. இப்பயிற்சிகள் அனைவருக்கும் பொதுவானவைதான்! இருப்பினும் ஆண்களை விடப் பெண்களுக்குப் பலனளிக்கக் கூடியவை. இடுப்பையும் பின் பகுதியையும் வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகள்

1. இடது பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள், வலது காலை மடக்கிக் கொண்டு, இடது காலை தலை வரை உயர்த்தி நீட்டுங்கள். முழங்கால்களைப் பின்னோக்கி மடக்க வேண்டும். அதன் பின் வலது காலை நீட்டி மடக்க வேண்டும். இவ்வாறு 20 முறை செய்யவும். கால் தரையில் படக் கூடாது.

2. மேற்சொன்னவாறு படுத்துக் கொண்டு வலது காலை உயர்த்திக் கீழே இறக்கவும். கீழே இறக்கும் போது வலது கால் தரையில் படக் கூடாது இவ்வாறு 20 முறை செய்யவும். (குறைந்தது 10 முறையாவது செய்ய வேண்டும்.)

3. இப்போது வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு மேலே கூறப்பட்டுள்ள இரண்டு உடற்பயிற்சிகளையும் செய்யவும்.

வயிற்றை வலுவாக்கும் உடற்பயிற்சி:

சிலருக்கு வயிறு தொங்கிக் கொண்டு, தளர்ச்சியாக பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். அப்படிப்பட்ட அமைப்புடையவர்கள் கீழ்க்காணும் உடற்பயிற்சியைச் செய்து பலன் பெறலாம். மல்லாந்து படுத்துக் கொள்ளவும். முழங்காலை மடக்கிக் கொள்ளவும். உடலைச் சுழற்றி உயர்த்தவும். கை விரல்களால் விரல்களைத் தொட்டு பின்னர் பழைய நிலைக்கு வரவும். ஒவ்வொரு முறையும் காலை மாற்றி மாற்றி இவ்வாறு 15 முறை செய்யவும்.

முழு உடலுக்கும் ஏற்ற அருமையான பயிற்சி:

உடற்பயிற்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். அதாவது, இதைச் செய்துவிட்டுத்தான் மற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். எல்லா உடற்பயிற்சிகளையும் செய்து முடித்த பின் இறுதியாக இந்த உடற்பயிற்சியை மீண்டும் ஒருமுறை செய்ய வேண்டும்.

கால்களை அகலமாக வைத்துக் கொண்டு, (1 அடி) நிற்க வேண்டும். கைகளைத் தலைக்கு மேல் கோர்த்துக் கொள்ள வேண்டும். உடலைக் கூடிய வரை உயர்த்தி, முழங்காலை மடக்கி மெதுவாக முன்னோக்கி வலது கால் மீது வளையவும். கைகளால் வலது காலை அழுத்தி உடலைக் கால்களுக்கு இடையில் கொண்டு வரவும்.

பின்னர் கைகளைத் தரையில் அழுத்தி நிமிரவும். மீண்டும் இதேபோல் இடது கால் மீது வளைந்து பின்னர் பழையபடி நிமிரவும். இவ்வாறு ஒவ்வொரு கால் மீதும் 5 முறை செய்யவும்.

வயதானவர்கள் இந்த உடற்பயிற்சிகளை மிகவும் எளிதாகச் செய்யலாம் எந்தச் சிரமமுமில்லை.

இந்த உடற் பயிற்சிகளைத் தினமும் ஒழுங்காக செய்து வந்தாலே போதுமானது. உடலை ஆரோக்கியமாகவும், அளவாகவும், அழகாகவும் வைத்திருக்கலாமே!

இந்த உடற்பயிற்சிகளைச் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

1. அதிகமான கொழுப்பைக் குறைக்கிறது.
2. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இயல்பான நிலைக்குக் கொண்டு வருகிறது.
3. இரத்தத்தில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்துச் சிராக்குகிறது.
4. தேவையற்ற சதைகளை உதைத்துத் தள்ளுகிறது.
5. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் நாம் விளங்க இப்பயிற்சிகள் உறுதுணையாக நிற்கிறது.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த எளிய உடற்பயிற்சிகளை நீங்களும் செய்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாமே! அதுமட்டுமா, வயதானவர்களாகிய உங்கள் உடம்பு அழகாகவும், அளவாகவும் அமைந்து. பார்ப்பவர்களைக் கவர்ந்து இழுக்கும்! இதில் எள்ளளவும் ஐயமில்லை.

தாராபுரம் சுருணிமகன்

The post அறுபதிலும் அழகாய் இருக்க வேண்டுமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
4262
டிப்ஸ்:பாதுகாப்பான சுற்றுலாவுக்கு! https://koodal.com/health/life-style/2022/01/10/vacation-planning-tips/ Mon, 10 Jan 2022 05:09:43 +0000 https://koodal.com/?p=417 கோடையைக் கொண்டாட அற்புதமான வழி சுற்றுலா. ஆனால், பல சமயங்களில் வெளியூர் பயணங்களே வியாதிகளுக்கான அழைப்புகளாக மாறிவிடுவது உண்டு. பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கு எப்படி தயாராவது? வழிகாட்டுகிறார்கள் மருத்துவர்கள் நாகராஜன், சிவராமன் இருவரும். இடத்தைத் தேர்ந்தெடுங்கள் சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கான…

The post டிப்ஸ்:பாதுகாப்பான சுற்றுலாவுக்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கோடையைக் கொண்டாட அற்புதமான வழி சுற்றுலா. ஆனால், பல சமயங்களில் வெளியூர் பயணங்களே வியாதிகளுக்கான அழைப்புகளாக மாறிவிடுவது உண்டு. பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கு எப்படி தயாராவது? வழிகாட்டுகிறார்கள் மருத்துவர்கள் நாகராஜன், சிவராமன் இருவரும்.

இடத்தைத் தேர்ந்தெடுங்கள்

சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கான முதல் படி. பெரும்பாலும் கூட்டம் குவியும் இடங்களைத் தவிர்த்து, அதிகம் அடையாளம் காணப்படாத இடங்களைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக கொடைக்கானல் போவதற்குப் பதிலாக தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலைக்குப் போகலாம். சுற்றுலாத் துறையிலோ, வனத் துறையிலோ விசாரித்தால் இப்படிப்பட்ட அதிகம் அறியப்படாத அற்புதமான இடங்களை உங்களுக்குச் சொல்வார்கள். இத்தகைய இடங்கள் சுற்றுலாவை நீங்கள் முழுமையாக அனுபவிக்க உதவுவதுடன் கூட்டத்தால் ஏற்படும் நெரிசல், நெருக்கடி, நோய்த்தொற்று ஆகியவற்றில் இருந்தும் உங்களைக் காக்கும்.

சூரியனை எதிர்கொள்ளுங்கள்

அலுவலகத்துக்குள்ளும் வீட்டுக்குள்ளுமே இருந்து பழகிய உடல், திடீரென நாள் முழுவதும் வெயிலில் சுற்றும்போது தடுமாறும். வெப்பத்தை எதிர்கொள்ள பருத்தி ஆடையை அணியுங்கள். கண்ணுக்குத் தரமான கூலிங் கிளாஸை அணியுங்கள். தொப்பி அல்லது குடையை எடுத்துக்கொள்ளுங்கள். கைகளிலும் உதடுகளிலும் தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவிக்கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் வெந்தயம் விழுங்குவதும் உடல் சூட்டை வெகுவாகத் தணிக்கும்.

நிறைய தண்ணீர், கொஞ்சம் உணவு

பாதுகாப்பான குடிநீர் அவசியம். பயணங்களின்போது பரவும் பெரும்பாலான நோய்கள் தண்ணீர் மூலமாகத்தான் பரவுகின்றன. குறிப்பாக, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு மூலக் காரணமே சுகாதாரமற்ற தண்ணீர்தான். அதனால், சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவசியம் தண்ணீர் குடியுங்கள் (வெப்பச் சூழலில் மட்டும் அல்ல் குளிர் சூழலிலும் டிஹைட்ரேஜன் ஏற்படலாம்). குளிர்பானங்களைத் தவிருங்கள். இளநீர் அருந்துங்கள். தர்பூசணியும் நல்லது.

வெளியூர்ப் பயணங்களின்போது வீட்டுச் சாப்பாடு கிடைப்பது அரிது. நல்ல உணவகங்கள் கிடைப்பதோ பெரும் சவால். என்ன செய்யலாம்? கூடுமானவரை பழங்களையும் உலர் பழங்களையும் சாப்பிடுங்கள். மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களைச் சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கும்.

பழங்களில் மிளகாய்த் தூள் தூவி சாப்பிடுவதைத் தவிருங்கள். சமைக்காமல் மிளகாய்த்தூளை உட்கொள்வது வயிற்றுப்புண்ணில் இருந்து புற்றுநோய் வரை கொண்டுபோகும். ஒருவேளை உணவகங்களில் சாப்பிட வேண்டிய சூழல் உருவானால், அதிக காரம் அற்ற, எளிதில் செரிமானமாகும் உணவாகச் சாப்பிடுங்கள்.

மஞ்சள் மகிமை

அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய முதல் உதவிப் பெட்டியை எடுத்துச் செல்வது நல்லது. அதில் மருந்துகளோடு துளசி இலைகள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றுக்கும் இடம் கொடுங்கள். நீர்நிலைகளில் குளிப்பதால் ஏற்படும் ஒவ்வாமையைத் தவிர்க்க நான்கைந்து துளசி இலைகளைச் சாப்பிடலாம். வைரஸ் ஒவ்வாமை கிருமிகளை இவை அழித்துவிடும். மிளகுத் தூளையும், மஞ்சள் தூளையும் பாலில் கலந்து குடிப்பதன் மூலம் சின்னம்மை உள்ளிட்ட பல தொற்று நோய்களைத் தவிர்க்க முடியும். பூச்சிகள் கடிக்காமல் இருப்பதற்கும் பூச்சி கடித்தால் போடுவதற்கும் என கிரீம்கள் இருக்கின்றன. வனப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வதாக இருந்தால் அவசியம் இவற்றையும் வாங்கிச் செல்லுங்கள்.

முதல் தகவல் முதல் உதவி

நீங்கள் செல்லும் ஊரில் உள்ள மருத்துவமனைகளைப் பற்றிய விவரத்தையும் தெரிந்துவைத்திருப்பது நல்லது. அவசரம் என்றால் எங்கே செல்வது என்று அல்லாட வேண்டிய இக்கட்டை இது தவிர்க்கும். உங்கள் பெயர், முகவரி, ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய தகவல்கள் அடங்கிய அடையாள அட்டையையும் வைத்திருங்கள். மருத்துவக் காப்பீடு செய்து இருந்தால் அதற்கான அடையாள அட்டையையும் மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.

ஹேப்பி ஜர்னி… டேக் கேர்!

The post டிப்ஸ்:பாதுகாப்பான சுற்றுலாவுக்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
417
புகைப்பிடித்தலுக்கு வீட்டிலும் தடா https://koodal.com/health/life-style/2021/12/29/stop-smoking-at-houses/ Wed, 29 Dec 2021 01:16:50 +0000 https://koodal.com/?p=137 புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி செய்தி ஊடகங்கள் மூலமாக விரிவாகவே சொல்லப்பட்டு வருகின்றன. ஆனாலும் புகைப்பிடிக்கும் பழக்கம் குறைந்த பாடில்லை. புகைப் பிடிப்பதால் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அந்த புகையை சுவாசிக்கும் அப்பாவிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் இளம் வயதினராய் இருந்தால் பாதிப்பு…

The post புகைப்பிடித்தலுக்கு வீட்டிலும் தடா appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி செய்தி ஊடகங்கள் மூலமாக விரிவாகவே சொல்லப்பட்டு வருகின்றன. ஆனாலும் புகைப்பிடிக்கும் பழக்கம் குறைந்த பாடில்லை. புகைப் பிடிப்பதால் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அந்த புகையை சுவாசிக்கும் அப்பாவிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் இளம் வயதினராய் இருந்தால் பாதிப்பு கூடுதலாக இருக்கும். அதுவே பச்சிளம் குழந்தையாக இருந்தால் பாதிப்பு இன்னும் படுமோசமாக இருக்கும்.

பெற்றோருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கலாம். அவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தினால் சமுதாயத்துக்கு, அவர்களுடைய குடும்பத்துக்கு நன்மை கிடைக்கும். குறைந்த பட்சம் வீடுகளில் வைத்து புகைப்பிடிப்பதை கட்டாயம் நிறுத்த வேண்டும். ஏனெனில் இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சு விடுதல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும்.

சில பெற்றோர் குழந்தைகள் இருக்கும் அறைகளில் மட்டும் புகைப்பிடிக்க மாட்டார்கள். மற்ற இடங்களில் புகை விடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். புகையை வீட்டுக்குள் விட்டால் தானே பிரச்சினை, வெளியில் விட்டால் பிரச்சினை இல்லையே என்று புத்திசாலித்தனமாக யோசனை செய்து, ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு தம் அடிப்பார்கள். சிலர் தங்களுடைய தனி அறைக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்திக் கொண்டு தம் அடிப்பர். சிகரெட் கம்பெனிகள் தங்களுடைய தயாரிப்பை பயன் படுத்துவதால் எந்தவித கெடுதலும் ஏற்படாது என்று ஆசை வார்த்தைகள் கூறுகின்றன. இதற்கு மயங்குபவர்கள் குறிப்பிட்ட பிராண்டை வாங்கி குடிப்பார்கள். இவற்றால் எந்த பயனும் இல்லை.

சிகரெட் பிடிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் கெடுதல் பற்றி பெற்றோர் எந்தளவுக்கு தெரிந்து வைத்துள்ளனர் என்று கண்டுபிடிப்பதற்காக இங்கிலாந்தில் ஆய்வு நடத்தப் பட்டது. இதில் மொத்தம் 314 குடும்பங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர்களிடம் வீடுகளில் புகைப்பிடித்தல் தொடர்பாகவும், குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினை கள் தொடர்பாகவும் பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டன.

அப்போது 86 சதவீதம் பெற்றோர், புகைப்பிடித்தல் தங்களுடைய குழந்தைகளுக்கு கெடுதலை ஏற்படுத்தும் என்பதில் தெளிவாக உள்ளனர். 10-ல் 9 பேர் தங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் தவறு செய்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

பொதுவாக புகைப்பிடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் சீர்கெட்டு விடுகிறது. இந்த நிலையில் நம் வீட்டிலும் புகைப் பிடித்துக் கொண்டு இருந்தால் பாதிப்பு இரு மடங்காகி விடும். ஆகையால் நம்முடைய வீட்டில் புகைப்பிடித்தலுக்கு தடா போட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு கணிசமாக குறையும்.

The post புகைப்பிடித்தலுக்கு வீட்டிலும் தடா appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
137
சிறுநீரகங்களை செயலிழக்க செய்யும் https://koodal.com/health/life-style/2021/12/29/kidney-failure/ Wed, 29 Dec 2021 01:15:28 +0000 https://koodal.com/?p=135 சிறுநீரகப் பிரச்சினை வந்து விட்டால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்ற இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. அறுவை சிகிச்சை செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளி உயிரிழக்கும் வாய்ப்பு 4 மடங்கு அதிகம் ஆகும். சிறுநீரகப் பிரச்சினை இப்படி…

The post சிறுநீரகங்களை செயலிழக்க செய்யும் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சிறுநீரகப் பிரச்சினை வந்து விட்டால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்ற இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. அறுவை சிகிச்சை செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளி உயிரிழக்கும் வாய்ப்பு 4 மடங்கு அதிகம் ஆகும்.

சிறுநீரகப் பிரச்சினை இப்படி அபாயகரமாக இருக்கும் நிலையில், இதயம், ஈரல், நுரையீரல், மற்றும் உள்ளார்ந்த உறுப்புகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சிறுநீரகங்கள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது போன்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 7 முதல் 21 சதவீதம் பேருக்கு இயற்கையான சிறுநீரகங்கள் 5 ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.

உள்ளார்ந்த உறுப்புகள், ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். அதே நேரம் இதயம்-நுரையீரல் மாற்று அறுவை சிசிக்சை செய்து கொண்டவர்களுக்கு ஆபத்து கொஞ்சம் குறைவு தான்.

மாற்று அறுவை சிகிச்சைகளின் போது புதிய உறுப்புகளை உடல் ஏற்றுக் கொள்வதற்காக மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் தான் பின்னாளில் சிறுநீரகங்கள் பழுதுபட காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆக பொதுவாக மாற்று அறுவை சிகிச்சைகளின் மூலம் தொற்று நோய்கள், புற்றுநோய், எலும்பு வியாதிகள் வரும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் சிறுநீரகப் பிரச்சினையையும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்த ஏகப்பட்ட செலவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும் போது ஏற்கனவே மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பெரும் பணம் செலவிட வேண்டிய நிலையில், தொடர்ந்து போனசாக தொற்றிக் கொள்ளும் சிறுநீரகக் கோளாறையும் குணப்படுத்த மீண்டும் பெரும் பணம் செலவழிப்பது பெரும்பாலானோருக்கு இயலாத காரியம்.

The post சிறுநீரகங்களை செயலிழக்க செய்யும் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
135
எப்போதும் சோகமாக இருப்பவரா? https://koodal.com/health/life-style/2021/12/29/are-you-often-sad-and-tired/ Wed, 29 Dec 2021 01:12:57 +0000 https://koodal.com/?p=133 நம்மில் பலர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும், சோகமாகவே காட்சி அளிப்பர். அதற்கு அவர்களின் வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்னைகள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. மரபு பண்புகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அறிவியல்…

The post எப்போதும் சோகமாக இருப்பவரா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நம்மில் பலர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும், சோகமாகவே காட்சி அளிப்பர். அதற்கு அவர்களின் வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்னைகள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. மரபு பண்புகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அறிவியல் செய்திகளை வெளியிடும் பத்திரிகை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

நம்மில் பலர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சிலர் எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். சோகத்தையும் மறைத்து மற்றவர்கள் மத்தியில் புன்னகையோடு இருக்கின்றனர். இதற்கு வாழ்க்கையில் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் மட்டுமே காரணமில்லை. அவர்களின் மரபணுக்களும் (ஜீன்), மரபு சுதியான பண்புகளுமே காரணம். மகிழ்ச்சியான திருமணம், உண்மையான பாசமிக்க நண்பர்கள், போதிய வசதிகளை அனுபவிக்கத் தேவையான பணம், மதத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை போன்றவை மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தாலும், இவற்றை எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மரபு பண்புகளும், மரபணுக்களும் இருக்கும் என நம்பப்படுகின்றன.

அதனால், ஒருவர் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பதற்கு அவர்களின மரபு பண்புகள் மற்றும் மரபணுக்களே முதல் காரணம். அதற்கு அடுத்தபடியாக ஒருவருக்கு திருமணம் மகிழ்ச்சியைத் தரலாம். நல்ல நண்பர்கள் கிடைப்பதன் ஒருவர் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். கோல்கட்டாவில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நகரில் மத்திய தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அளவிற்கு சந்தோஷமாக இருப்பது போல காணப்படுகின்றனர்.

அதனால், ஒருவரின் வாழ்வு மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் மரபுப் பண்புகளே 90 சதவீத இடத்தைப் பிடிக்கின்றன. தனிப்பட்ட நபர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் அவருக்கு மகிழ்ச்சியையோ, விரக்தியையோ தரலாம். இருந்தாலும், ஒரே விதமான வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட அதே நேரத்தில், மாறுபட்ட மரபுப் பண்புகளைக் கொண்ட இருவர் வெவ்வேறான வகையில் தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மின்னிசோடாவில் கடந்த 1936ம் ஆண்டிற்கும், 1955ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இரட்டைக் குழந்தையாகப் பிறந்து தற்போது வாலிபர்களாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், இரட்டையர்களின் மகிழ்ச்சி அளவில் மாறுபாடுகள் உள்ளதாகவும், அவர்களின் மரபுப் பண்புகளிலும் ஏற்ற இறக்கங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. 44 சதவீதம் 5 சதவீதம் வரை வேறுபாடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வருமானம், திருமணம், கல்வி போன்றவைகளால் இரட்டையர்களுக்கு இடையே ஏற்படும் மகிழ்ச்சியின் அளவில் மூன்று சதவீதத்திற்கு மேல் வேறுபாடுகள் இல்லை.

The post எப்போதும் சோகமாக இருப்பவரா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
133
தொலைவில் வைப்போம் : டி.வி. மற்றும் தொலைபேசியின் தாக்கத்தை https://koodal.com/health/life-style/2021/12/28/common-tips-for-child-care-keep-children-away-from-watching-tv-closer/ Tue, 28 Dec 2021 23:07:01 +0000 https://koodal.com/?p=124 அதிகமாக டி.வி. பார்ப்பதால் குழந்தைகளின் வலது மூளை, இடது மூளையை விட அதிகம் பணிபுரிந்து ஒரு நிலையற்ற சலன மனம் உள்ள மனிதரை உருவாக்கும். குழந்தைகளின் கவனிக்கும் திறனை டி.வி. குறைக்கிறது. உணவு, உடை, உறைவிடம் இவற்றைப் போல் தொலைக்காட்சியும் நம்…

The post தொலைவில் வைப்போம் : டி.வி. மற்றும் தொலைபேசியின் தாக்கத்தை appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அதிகமாக டி.வி. பார்ப்பதால் குழந்தைகளின் வலது மூளை, இடது மூளையை விட அதிகம் பணிபுரிந்து ஒரு நிலையற்ற சலன மனம் உள்ள மனிதரை உருவாக்கும். குழந்தைகளின் கவனிக்கும் திறனை டி.வி. குறைக்கிறது.

உணவு, உடை, உறைவிடம் இவற்றைப் போல் தொலைக்காட்சியும் நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகி விட்டது. இன்றைய இயந்திர வாழ்க்கையில், தொலைக்காட்சியே நடுத்தர, கிராமப்புற, நகர்ப்புற மக்களின் வருமானத்திற்கேற்ற பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது.

உலகே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட இன்றையச் சூழ்நிலையில் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த மொழி பேசினாலும் தன் சொந்த மொழியில் உள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பை வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு வழங்கியுள்ளது செயற்கைக் கோள் தொலைக்காட்சி. இசை, நடனம், கல்வி, சொல்லாற்றல், கவிதை இவற்றில் தனித்தன்மை கொண்ட பல மாணவர்களுக்காக பல நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களைத் தொலைக்காட்சி ஊக்கப் படுத்துகிறது.

தொலைபேசியின் மூலம் பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்களின் கருத்துகளை நேயர்கள் நேரடியாகக் கேட்டுப் பயன்பெற முடிகிறது.

இப்படி பல நன்மைகளைத் தொலைக்காட்சி ஏற்படுத்தினாலும் தனி மனித வாழ்விலும் சமூகத்திலும் தொலைக்காட்சி பல விருப்பந்தகாத பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

முன்பெல்லாம் எந்தத் தெருவிற்குச் சென்றாலும் கூட்டம் கூட்டமாகக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் . இப்பொழுது இது ஓர் அரிய நிகழ்ச்சியாகி விட்டது. பள்ளியிலிருந்து வரும் குழந்தைகள் பல மணிநேரம் உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்ய வேண்டியுள்ளது. பின் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து ஒரு நாளின் எஞ்சிய நேரத்தையும் கழித்து விடுகிறார்கள். குழந்தைகளின் உடலும் மனமும் இதனால் சோர்வடைகின்றன.

ஏதாவது ஒரு மெகா சீரியல் நடந்து கொண்டிருக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தாலோ அல்லது யாராவது வந்தாலோ முழு மனத்தோடு அவர்களுடன் உரையாட முடிவதில்லை. இதன் விளைவாக நண்பர்கள், உறவினர்கள் என்று எவரும் அடிக்கடி பார்த்து, பேசி, பழகும் களிப்பை ஒதுக்கி வருகிறோம். வெளியில் வேலை முடிந்ததும் “தன் பெண்டு, தன்பிள்ளை, சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு, தன் வீட்டுத் தொலைக்காட்சி உண்டு” என்று வாழ்க்கை முறையே மாறி விட்டது. இந்நிலை இப்படியே தொடர்ந்தால் சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்துப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விளைவு விரக்தியும் மனச்சோர்வும் தான். அய்யோ என்ற அலறல் கேட்டால் அடுத்த வீட்டுக்காரர்கள் ஓடி வரும் நாகரிகம் குறைந்து கொண்டே போவதற்கு, தொலைக்காட்சியும் ஒரு காரணம்.

இவை மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தால் கண் பார்வை கெட்டு விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பாலியல் மற்றும் வன்முறை சம்பந்தப் பட்ட காட்சிகள், நம்முடைய நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில் பல சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் வளர்ந்து வருகிறது. இவை தவிர எண்ணிப் பார்க்க முடியாத பல பாதிப்புகளையும் தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது.

தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மூளையைப் பெரிதும் பாதிக்கிறது என்ற மருத்துவ வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.” தொலைக்காட்சித் திரையிலிருந்து வெளி வரும் கதிர் வீச்சு, 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மேல் அபாயகரமான விளைவை ஏற்படுத்துகிறது. டி.வி. பார்ப்பது குழந்தைகளின் மூளைக்குத் தீர்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று மத்திய நடத்தை அறிவியல் நிறுவனத்தின் (Central Institute of Behavioural Sciences) இயக்குநரும், குழந்தை மனநல மருத்துவருமான டாக்டர் சைலேஸ்பகோங்கர் கூறுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ” மாந்தன் ” என்ற பெயரில், குழந்தைகள் மத்தியில் இந்நிறுவனம் நடத்தி வந்த ஆய்வு, டி.வி.யிலிருந்து வெளிவரும் கதிர்கள் மூளையின் பகுதிகளில் சேதம் ஏற்படுத்துகின்றன என்று நிரூபித்துள்ளது. இந்த ஆய்வு சம்பந்தமான தனிப்பட்ட சோதனைகளும் ” டி.வி. பார்க்கும் போது அபாயமான புதிய வேதிப் பொருள்கள் குழந்தைகளின் மூளையில் உருவாகின்றன” என்று கண்டறிந்துள்ளன. ” அதிகமாக டி.வி. பார்ப்பதால் குழந்தைகளின் வலது மூளை, இடது மூளையை விட அதிகம் பணிபுரிந்து ஒரு நிலையற்ற சலன மனம் உள்ள மனிதரை உருவாக்கும். குழந்தைகளின் கவனிக்கும் திறனை டி.வி. குறைக்கிறது. இது மட்டுமல்லாமல் அவர்களுடைய சகிப்புத் தன்மையையும் குறைத்து, விரக்திக்குச் சாதகமான மனநிலையை அவர்களிடம் உருவாக்குகிறது. அவர்களுடைய நினைவுத் திறன், உணர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் ஆய்வுத் திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது” என்று டாக்டர் பகோங்கர் கூறுகிறார்.

சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வின் படி, தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்ப்பது குழந்தைகளிடம் ஒரு மெய் மறந்த நிலையை உருவாக்கும் என்றும் மூளையின் மேற் பகுதியில் உள்ள சக்தி வாய்ந்த பகுதிகளில் உள்ள கவனத்தை மூளையின் கீழ்ப் பகுதிக்கு மாற்றி இழிந்த உணர்ச்சிகளுக்கு இடம் தேடிக் கொடுக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர். மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் இத்தகைய மாற்றம் அபின் போன்ற போதை உணர்வை உடலில் இயற்கையாகத் தோற்றுவிக்கிறது. இந்தப் பாதிப்பிற்கு சிகிச்சையே கிடையாது என்பது தான் மிகவும் அச்சமளிக்கும் விஷயமாகும். இதனைத் தடுக்கலாமே யொழிய குணப்படுத்த இயலாது.

மூளை மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தம், அதிக அளவிலான கொலஸ்ட்ரால் போன்ற நோய்களினால் உடலும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் கீழ்ப்படியும் தன்மையை அறவே மறந்து விடுகிறார்கள்.
சரி, இவற்றுக்குத் தீர்வு தான் என்ன? டி.வி. யை முழுமையாகத் தவிர்க்க முடியுமா என்ற கேள்விகள் மனத்தில் எழலாம். முழுமையாகத் முடியா விட்டாலும் டி.வி. பார்க்கும் நேரத்தின் அளவை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். வருமுன் காப்பது நல்லது.

குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது தான் இதற்கு ஒரே வழி என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாவது குழந்தைகள் படித்தால் தான் இக்குறையை ஓரளவிற்குக் கட்டுப் படுத்தலாம். பாடப் புத்தகத்தைத் தவிர, குழந்தைகளுக்கான கதைகள், துணுக்குகள், வண்ணம் தீட்டுதல் போன்ற பொழுது போக்கின் மூலம் அறிவை வளர்க்கும் புத்தகங்களை வாங்கித் தர வேண்டும். குழந்தைகளுக்கு கற்றலின் இனிமையைப் புரிய வைக்க வேண்டும்.

பள்ளிகள் மற்றும் சமூக நிறுவனங்கள் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும். டி.வி. க்கு ” முட்டாள்களின் பெட்டி” என்ற பெயரும் உண்டு. இப்போது அப்பெட்டி எதிர்காலச் சமுதாயத்தையே முட்டாளாக்கும் பெட்டியாக உள்ளது. டி.வி. யைத் தவிர்த்து ” அறிவை விரிவு செய்; விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று நம் வீட்டுச் சிறார்களை உற்சாகப் படுத்தி உணர வைப்போம் !

The post தொலைவில் வைப்போம் : டி.வி. மற்றும் தொலைபேசியின் தாக்கத்தை appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
124
ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க https://koodal.com/health/life-style/2021/12/28/health-care-tips-control-five-senses-to-live-long/ Tue, 28 Dec 2021 23:02:14 +0000 https://koodal.com/?p=122 கண், காது, மூக்கு, வாய் (நாக்கு), மெய் (தோல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே இவற்றுக்குத் தீமை வராமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கல்வி உள்பட வாழ்க்கையில் மேன்மை அடைவதில் எவ்விதத் தடையும் இருக்காது. விண்ணில்…

The post ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க appeared first on கூடல் | Tamil Koodal.

]]>

கண், காது, மூக்கு, வாய் (நாக்கு), மெய் (தோல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே இவற்றுக்குத் தீமை வராமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கல்வி உள்பட வாழ்க்கையில் மேன்மை அடைவதில் எவ்விதத் தடையும் இருக்காது.

விண்ணில் பறந்து கொண்டிருக்கும் போதே 1000 அடி கீழே உள்ள கோழிக் குஞ்சைப் பார்த்து “லபக்” கென்று கால்களால் கவ்வும் திறன் படைத்தவை கழுகுகள். இயற்கையிலேயே கழுகுக்கு கண்கள் வரப்பிரசாதம். இதே போன்று இயற்கையிலேயே அனைத்துத் திறனுடன் கிடைத்த கண்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
ஒருவரின் காது கேட்கும் திறனைப் பாராட்ட நம் முன்னோர்கள் “பாம்புச் செவி” என்பார்கள். உண்மையில் பாம்புக்குச் செவி கிடையாது. ஆனால் அதன் உடல் முழுவதும் உள்ள செதில்கள், அதிர்வுகளை உணரும் தன்மையைக் கொண்டுள்ளன. இன்றைய தகவல் யுகத்தில் பாம்பைப் போல் அதிர்வுகளைக் கூட உணர்ந்தால் நிறைய சாதிக்க முடியும்.

கிளியின் சிவப்பு மூக்கு மிகவும் அழகானது. நம் மூக்கின் முக்கிய வேலை சுவாசம். முகத்துக்கு அழகு சேர்ப்பது மூக்கு. எனவே மூக்கைப் பாதுகாக்கா விட்டால் அழகு குறையும். தன்னம்பிக்கையில் ஊனம் ஏற்படும்.
ஒரு மரத்தில் 100 மாம்பழங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் அணில் கடித்துத் தின்பதில்லை. ஒரு சில பழங்களை மட்டுமே அது தேர்ந்தெடுத்துக் கடித்துச் சாப்பிடும். அணில் கடித்த பழம் மிகவும் சுவையாக இருக்கும். மனிதர்களின் ஜீரண மண்டலத்துக்கும் நாக்குக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. அணில் போன்று ருசி பார்த்துச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது.
மானின் தோல் மிருதுவானது. சுறுசுறுப்போடு சாந்தமான முகம் உடைய மான், வீண் வம்புக்குச் செல்லாது. உடல் உள் உறுப்புகளின் கேடயமாக விளங்கும் நமது தோலின் மிருதுத் தன்மையை மானைப் போலக் காப்பது அவசியம்.

கண்

“என்ன விலை அழகே” என்ற பாடல் காட்சியை நான் இல்லைன்னா நீங்க பார்த்து ரசிக்க முடியாதுங்க. உங்க தாத்தா, பாட்டி காலத்துல எல்லாம் எனக்கு வேலை குறைவா இருந்திச்சு; அதாங்க, அப்பெல்லாம் தூரத்துல்ல உள்ள பொருள்களைத் தான் எல்லாரும் அதிகமாகப் பார்த்தாங்க. இப்ப கம்ப்யூட்டர் யுகமுங்க. கம்ப்யூட்டர், எழுதறது, படிக்கிறதுன்னு கிட்ட கிட்ட பார்த்து வேலை செஞ்சு எனக்கு “ஒர்க் லோட்” அதிகமாகிப் போச்சுங்க.
எனக்கு அதிக வெளிச்சம் ஆகாதுங்க, என்னை மூடிக்கிட்டு நீங்க சிந்திச்சிங்கன்னா, எனக்கு அப்பப்ப ரெஸ்ட் கிடைக்கும்ங்க. வானத்துல ஓசோன் மண்டலத்துல ஓட்டை விழுந்துட்டதுன்னால சூரியன் இப்ப அதிகமா தினமும் உக்கிரத்துடன் பூமிக்கு வந்துக்கிட்டே இருக்காரு. அவர் பூமிக்கு வர்றதால தப்பில்லீங்க. அவரோட புற ஊதாக் கதிர் என் லென்ஸீக்கும் ரெட்டினாவுக்கும் (விழித் திரை) ஆகாதுங்க. சீக்கிரம் லென்ஸ்ல புரை வந்து ஆபரேஷன் செய்துக்க வேண்டிருக்குங்க. அதனால் தாங்க “கூலிங் கிளாஸ் போட்டுக் காம பைக் ஓட்டாதீங்கன்னு” ஸ்டெதஸ்கோப் காரங்க சொல்றாங்க.

உங்க வீட்டு கூர்க்கா கூட சமயத்தில் தூங்கிடுவாருங்க. ஆனா என்னோட கூர்க்காவான இமை துடித்துக் கொண்டே இருப்பாருங்க. ஒரு நிமிஷத்துக்கு மூன்று முதல் ஆறு தடவை அவர் துடிக்கலைன்னா என் பாடு ரொம்ப திண்டாட்டமுங்க. அவங்க துடிக்கலைன்னா லென்ஸோட ஈரத் தன்மை அவுட்டுங்க.
இப்ப எல்லாம் ஒன் டே கிரிக்கெட் மேட்ச் ரொம்ப த்ரில்லா ஆயிட்டுதுங்க. கடைசில, மேட்ச் என்ன ஆகும்னு இமை கொட்டாம பார்க்காதீங்க. கொஞ்சம் இமையைத் துடிக்க விட்டு, தூரத்துல நின்னு கை தட்டி ஜெயிச்சத கொண்டாடுங்க.

எனக்குப் பின்னாடி உள்ள ஸ்ட்ரா மாதிரி இருக்கிற பார்வை நரம்பு மூலம் மூளைக்குச் செய்தி செல்லும் வேகம் வேணுமாங்க? அழகான ஒருவரை நீங்க பாத்த உடனேயே, 0.002 நொடில அவரோட உயரம், நிறம், வயது எனப் “பல செய்திகள்” மூளைக்குப் போய்டுங்க.

என்னோட தசை உங்களுக்காக உழைப்பதை நீங்க நினைச்சு கூடப் பார்க்க முடியாதுங்க. நாள் முழுக்க எல்லாத்தையும் ஃபோக்கஸ் செய்ய என்னோட தசைங்க ஒரு லட்சம் தடவை அசையுதுங்க. இது போல கால் தசைக்குப் பயிற்சி வேணும்னா 75 கிலோ மீட்டர் நடக்கனும்னா பார்த்துக்குங்க.
ஒன்னே ஒன்னு சொல்லி முடிக்கிறங்க. வாழும்போதே என்னைத் தானம் செய்யறதா எழுதி வச்சுடுங்க. ஏன்னா, நீங்க பூமிக்குள்ள போனாலும் உங்க மூலமா நான் இரண்டு பேருக்கு பார்வை கொடுப்பேங்க.

காது

கண்ணுக்குத் தர முக்கியத்துவத்தில் பாதி கூட எனக்குப் பல பேர் தரதில்லீங்க. குழந்தை பிறந்த உடனே நான் வேலை பண்ணலேன்னா நீங்க மழலைச் சொல்லைக் கேட்டு ரசிக்க முடியாதுங்க. கேட்க கேட்கத் தாங்க பேச்சு வரும். புள்ளை பெத்து தாய்ப் பால் கொடுக்கிற அம்மணிகளுக்கு ஒரு முக்கியமான விஷயமுங்க. எனக்கும் தொண்டைக்கும் கனெக்ஷன் உண்டுங்க. என்ன தான் உடம்பு முடியலன்னாலும் சரி, சிசேரியனா இருந்தாலும் சரி குழந்தைக்குப் படுத்துக் கிட்டு பால் கொடுக்காதீங்க. ஏன்னா அப்படி பால் கொடுத்தீங்கன்னா சீழ் பிரச்சினை வரலாமுங்க. வலிச்சா குழந்தைக்குச் சொல்லத் தெரியாதுங்க. கைய அடிக்கடி காது கிட்ட கொண்டு போகுமுங்க.
அடுத்து செலஃபன் பேப்பர் போன்ற எனது டிரம்ம (செவிப் பறை) தெரிஞ்சுக்குங்க. வெளியிலிருந்து வர ஓசையெல்லாம் இங்க தாங்க முதலில் வந்து குவியுது. விடாம சீழ் வந்தா டிரம் ஓட்டையாயிடும் பார்த்துக்குங்க. டிரம் ஓட்டையானா எந்த ஓசையும் கேட்காதுங்கிறதை மறந்துடாதீங்க.

எங்கிட்ட அழுக்குச் சேர்ந்தா, தானே சுத்தமாயிடுங்க. சுத்தம் பண்றதுக்குன்னே எங்கிட்ட 4000 சுரப்பிகள் இருக்குங்க. ஹேர் பின், தீக்குச்சி, குரும்பி, பென்சில்ன்னு கையில கிடைக்கிறதெல்லாம் விடாதீங்க. பஞ்சு குச்சி கூட வேண்டாங்க. இதெல்லாம் டிரம்ம பஞ்சர் ஆக்கிடுங்க. அழுக்கு எடுக்கிற வேலைய ஸ்டெதஸ்கோப்காரங்க கிட்ட விட்டுடுங்க.

என்னை எப்போதும் தண்ணீ இல்லாம டிரையா வச்சுக்குங்க. பிரச்சினை இருந்து தலைக்குக் குளிக்கிறவங்க பஞ்சுல தேங்காய் எண்ணெய் தோச்சு வச்சுக்குங்க. எண்ணெய் தோச்சு பக்கம் வெளிப்புறம் இருக்கனும்ங்க. அப்ப தான் என்னோட உள் உறுப்புகளுக்குள்ள தண்ணீ போகாதுங்க.

நீங்க தலை சுற்றி கீழே விழாம நேரா நடக்கறதுக்கு, நிக்கறதுக்கு நான் தாங்க டியூட்டி ஆபீசர். பாலன்ஸ் பராமரிக்கிற அற்புதமான சமாசாரம் என் உள்ளுக்குள்ள (நடுக்காதைத் தாண்டி) இருக்குங்க. அதுல ஓடுற திரவம் மாறிப் போச்சுன்னா, ” தண்ணீ ” போடாமலேயே நீங்க தள்ளாட ஆரம்பிச்சுடுவீங்க.

ஓசை மூலம் பேச்சுங்கிறதனால எனக்கும் மூளைக்கும் கனெக்ஷன் உண்டுங்க. பிரச்சினை வர்றப்ப ஆரம்பத்திலேயே என்னைக் கண்டுக்காம விட்டீங்கன்னா, மூளைக்கும் ஆபத்து வந்து நிழல் படமாயிடுவீங்க. அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லீங்க. இதனால தாங்க என்னை, செல்வத்துள் செல்வம்ன்னு “அய்யன்” சொல்லிருக்காரு.

மூக்கு

என்ன எப்போதும் தொல்லை தர உறுப்பா பார்க்கிறதே எல்லாருக்கும் வழக்கமாப் போச்சு. அதாங்க , கூட்டணி சேர்க்கிற ஜலதோஷம் வந்தாலே என்னைச் சபிக்காதவங்க கிடையாதுங்க. ஆனா, நான் எவ்வளவு நல்ல வேலை செய்யறேன்னு யாருக்கும் தெரியாதுங்க.

ராத்திரிலே தூக்கத்துல ஒரே பக்கமா படுக்காம புரண்டு புரண்டு நீங்க ஏன் படுக்கிறீங்க தெரியுமா? உதாரணமா ஒரு ஆசாமி இடப் பக்கமா படுத்துத் தூங்க ஆரம்பிக்கிறார்ன்னு வச்சுக்குவோம் ; கொஞ்ச நேரத்துல அந்த ஆசாமி தன்னாலே வலது பக்கம் புரண்டு படுப்பாரு. இடப்பக்க மூக்கு அடைபடாம இருக்க, தூங்கற ஆகாமிய எழுப்பாம தன்னிச்சையா நான் செய்யற நல்லதுங்க இது.

இலையில நீங்க உட்கார்ந்த உடனேயே சாப்பிடலாமா, வேண்டாமான்னு சின்ன மோப்பம் பிடிச்சு நாக்கையும் வயத்தையும் நான் தாங்க தூண்டறேன். இதனால் தாங்க ஜலதோஷம் பிடிச்சா உங்களால சரியா சாப்பிட முடியறதில்ல. 4000 வகை சென்ட் வாசனையை ரொம்ப கரெக்ட்டா துப்பறியும் திறமை எனக்கு உண்டுங்க.
நீங்க கல கலன்னு பேசறதுக்கு நான் உள்ளே அனுப்பற காத்துதாங்க காரணம். சந்தேகமா இருந்தா, கொஞ்சம் மூக்கை மூடிக் கொண்டு பேசிப் பாருங்க. எல்லாரும் ஓடிடுவாங்க.

நுரையீரலுக்கு போற காற்ற ஃபில்ட்டர் பண்ணி, கொஞ்சம் சூடு படுத்தி அனுப்பறது என்னோட முக்கியமான வேலைங்க. சுத்தமான காற்று எனக்கு ரொம்பப் பிடிக்குமுங்க. ஆனால் எல்லாம் தெரிஞ்ச மனுஷங்க கூட எனக்கு கெடுதல் பண்ணனும்னு புகை விடறாங்க. இது போல வாகனங்கள் விடுற புகை கூட எனக்கும் என் அண்ணன் நுரையீரலுக்கும் ஆகாதுங்க.

என் கிட்ட உள்ள இரண்டு துளைப் பாதை முழுவதும் சளிப் படலம் இருக்குங்க. “அன்னிய நாட்டுக்காரங்க” (பாக்டீரியா) யாராவது நுழைந்த உடனேயே இவங்க தான் அவங்கள சுட்டுத் தள்ளுவாங்க. “ஹச்” – ன்னு தும்மல் போடறீங்களே. அதாங்க, என்ன மீறி உள்ளே போற வெளி நாட்டுக்காரங்கள பெரிய அண்ணன் (வயிறு) தனது அமிலம் மூலம் கொன்னு போட்டுருவாருங்க.

“காது – மூக்கு – தொண்டை நிபுணர்ன்னு” ஸ்டெதஸ்கோப்காரங்க சொல்றதிலிருந்தே எங்களோட உறவை நீங்க புரிஞ்சுக்கிட்டிருப்பீங்க. இதுல நான் தாங்க வி.ஐ.பி. ஏன்னா, எடுத்த உடனே தொந்தரவு ஆரம்பிக்கிற மாதிரி பகிரங்கமா வெளியில தெரியற உறுப்பா நான் இருக்கேங்க. அதனால வி.ஐ.பி. க்கு உரிய மரியாதைய நீங்க எனக்கு கொடுத்திட்டீங்கன்னா நீங்க பாட்டுக்கு வேலை செய்யலாமுங்க.

வாய் (நாக்கு)

தலைப்பைப் பார்த்த உடனே , “அம்மா” வுக்காக (தமிழ் நாட்டுக்கு ஒரே “அம்மா” தாங்க) நாக்கை அறுத்துக்கிட்டவர் கதை உங்களுக்கு ஞாபகம் வரக்கூடாதுங்க. நான் இல்லைன்னா உங்களால ஸ்பஷ்டமா பேச முடியாதுங்க.
என்னோட முனை மூலமா உப்பையும், நடுப் பகுதி மூலமா இனிப்பையும், பின்புறம் மூலமா கசப்பையும், ஓரம் மூலமா புளிப்பையும் உங்க மூளைக்குச் சொல்றேங்க.

எங்கிட்ட சுவை அரும்புகள் இருக்குங்க. நீங்க ரொம்ப சூடா சாப்பிட்டாலும் ரொம்ப ஜில்லிப்பா சாப்பிட்டாலும் நான் அட்ஜஸ்ட் செய்துக்குவேங்க. ஆனால் ரொம்ப சூடோ, ரொம்ப ஜில்லிப்போ பெரிய அண்ணன் வயித்துக்கு ஆகாதுங்க. ஏன்னா, வயித்துல புண் இருந்தா இதனால ஜாஸ்தியாயிடுமுங்க.

உங்களுக்கு வயசு ஆக ஆக என்னோட சுவை அரும்போட எண்ணிக்கை குறைஞ்சு போய்டுமுங்க. சுவையைக் கட்டுப் படுத்தும் மூளை நரம்பும் தளர்ந்து போய்டுமுங்க இதனால பொக்கை வாய் காலத்துல தாகம் இருக்காதுங்க. இத மனசுல வாங்கிக்கிட்டு தாகம் எடுக்காமலேயே, நீங்க தண்ணீ குடிச்சீங்கன்னா கொள்ளுப் பேரன் – பேத்தி மழலை யெல்லாம் கேட்க உசிரு மிஞ்சுமுங்க.

நோய் வந்தா நான் ஒரு கண்ணாடிங்க. டைஃபாய்டு ஆகட்டும், மஞ்சள் காமாலையாகட்டும் — ஸ்டெதஸ்கோப் காரங்க முதல்ல பார்க்கறது என்னைத் தாங்க. ரொம்ப போர் அடிச்சுட்டேனா, நாவடக்கம் மேன்மை தரும்ன்னு அப்ப சொன்னாங்க… சாப்பாட்டுக்கும் அது இப்ப பொருந்துதுங்க.

மெய் (தோல்)

உடம்புக்கு ஒத்துக்காத பொருள் பத்தி உடனே அலாரம் (அரிப்பு, தடிப்பு) அடிக்கிறது நான் தாங்க. உடம்புக்குள்ளே எல்லாம் பத்திரமா இருக்கறதுக்கு நான் தாங்க காரணம். சூரிய ஒளிலேர்ந்து வைட்டமின் டி, நீங்க ஜாலி மூடில் இருக்க செக்ஸ் ஹார்மோன் உற்பத்தி பண்ற ஃபாக்டரி நான் தாங்க. எனக்குத் தண்ணீய சேத்து வச்சுக்கற சக்தியும் உண்டு ; வெளியேத்தற சக்தியும் உண்டுங்க. இது இல்லாட்டி நீங்க நீச்சல் குளத்துல மணிக்கணக்கில் ஆட்டம் போட முடியாது. கத்தரி வெயில்லேயும் அலைய முடியாதுங்க.

பாம்பு எப்படி அப்பப்ப தோல் உரிச்சுக்குதோ அதே போலத்தான் நானும், லட்சக்கணக்கான செல்களை உதிர்த்து உங்களுக்காக 27 நாளைக்கு ஒரு முறை என்னைப் புதுப்பிச்சுக்கிறேன். எனக்கு அடில உள்ள வியர்வைச் சுரப்பி தாங்க உங்க உடம்பு அழுக்கயெல்லாம் வெளியேத்தது; உடம்போட நீர் இழப்பை ஈடு கட்டுது.

நீங்க கோபப்பட்டா முகம் ஏன் சிவக்குதுன்னு தெரியுமாங்க? நான் தாங்க முகத்தில உள்ள ரத்தக் குழாய திறந்து விடறேன். இப்படி தாங்க நீங்க பயப் படறப்ப, ரத்தக் குழாயை மூடறதால உள்ளங்கை ஜில்லிட்டுப் போகுதுங்க.
என்ன நீங்க நல்லா வச்சுக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேண்டாமுங்க. வேம்பு போன்ற மூலிகை கலந்த சோப்பு போட்டு தினமும் குளிச்சுடுங்க. சூரியனாரின் பார்வை அதிகமா என் மீது படாம பார்த்துக்குங்க; அலையறது தான் பொழப்புன்னா, என்ன செய்யறதுன்னு கேட்கிறீங்களா; கையில குடை வச்சுக்குங்க; தலைக்குக் குல்லாவும் குளு குளு கண்ணாடியும் போட்டுக்குங்க. நீங்க இப்படி செஞ்சீங்கன்னா ஆயுள் முழுக்க உங்களுக்கு “தோள்” கொடுப்பேனுங்க.

The post ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
122
இதயம் காத்தால் குஷி நிச்சயம்! https://koodal.com/health/life-style/2021/12/28/health-care-tips-for-heart/ Tue, 28 Dec 2021 23:00:04 +0000 https://koodal.com/?p=120 மனித உறுப்புகளிலேயே இதயம் மிகவும் இன்றியமையாத உறுப்பு. ஆண்களுக்கு 450 கிராமும், பெண்களுக்கு 350 கிராமும் எடை உள்ளதாக இருக்கும். மனித உடலின் தசைகளிலே மிகவும் உறுதியானது இதயத் தசை. இது ஒரே சீராக தினசரி ஒரு லட்சம் தடவைக்கு மேல் துடித்து,…

The post இதயம் காத்தால் குஷி நிச்சயம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மனித உறுப்புகளிலேயே இதயம் மிகவும் இன்றியமையாத உறுப்பு. ஆண்களுக்கு 450 கிராமும், பெண்களுக்கு 350 கிராமும் எடை உள்ளதாக இருக்கும். மனித உடலின் தசைகளிலே மிகவும் உறுதியானது இதயத் தசை. இது ஒரே சீராக தினசரி ஒரு லட்சம் தடவைக்கு மேல் துடித்து, மனித உடலில் இருக்கும் சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள ரத்த நாளங்களில் 15 ஆயிரம் லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது.

ஒருவர் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் சரி, ஓய்வெடுத்த நிலையில் இருந்தாலும் சரி, ரத்த நாளங்களில் தேவையான ரத்தமும், ஆக்சிஜனும் சதா ஓடிக் கொண்டே இருக்கும். ஒருவர் ஓய்வாக இருக்கும் போது இதயம் 1 நிமிஷத்துக்கு 60 முதல் 80 தடவை வரை ஒரே சீராகத் துடித்து இயங்குகிறது.

உடல் பயிற்சி செய்யும் போது இரு மடங்கு வேகத்துடன் உடலின் இயக்கத்துக்கு ஏற்ற படி ஒரு நிமிஷத்துக்கு 4 முதல் 6 மடங்கு அதிகமான ரத்தத்தைச் செலுத்துகிறது. ஒருவர் உணர்ச்சி வசப்படும் போதும், சாப்பிடும் போதும், அதிகக் குளிரால் தாக்கப்படும் போதும், கடுமையாகச் செயல் படும் போதும் இதயத்துக்கு அதிகமான ஆக்சிஜன் தேவைப் படுகிறது.

உடலின் இதர உறுப்புகளைப் போல, இதய இயக்கத்துக்கும் சுத்தமான ரத்தம் தேவைப் படுகிறது. இதயத்துக்கு வேண்டிய சுத்த ரத்தம் இரு பெரிய நாளங்கள் அவற்றின் கிளைகள் மூலம் வந்து சேருகிறது.

மாரடைப்பு

  • மாரடைப்பு நோய்க்குப் பயப்படாதவர்கள் இல்லை. உலகில் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக இது இரூக்கிறது.
  • ஒரு காலத்தில் வயது வந்தவர்களையும், வசதி படைத்தவர்களையும் தான் பாதிக்கும் என்ற நிலை இருந்தது.
  • இன்று ஏழை, எளியவர்களும் இளம் வயதினரும் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர்.
  • இந்தியாவில் மாரடைப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.
  • இதயத்தின் ரத்த நாளங்களைத் தாக்கும் மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல.
  • 20 ஆண்டுக்கும் மேல் எந்த அறிகுறியும் இல்லாமல் வளரும்.
  • ரத்த நாளத்தின் உட்புறச் சுவர் பாதிக்கப் படும்போது இந்நோய் ஆரம்பமாகிறது.
  • உட்புறச் சுவர் பாதித்த பின் மிருதுவான பகுதி கரடு முரடாகிறது. அப் பகுதியில் ரத்தத்தில் மிதக்கும்
  • கொழுப்புச் சத்துகள் படிந்து கொண்டே வந்து ரத்த ஓட்டப் பாதையைக் குறுகலாக்கி வழக்கமான ரத்த ஓட்டத்தைக் தடை செய்கிறது.
  • இதற்கு மேல் நாளத்தில் ஒரு விறைப்போ, பாதிக்கப் பட்ட இடத்தில் உறை கட்டிப் படிதலோ ஏற்பட்டால் ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைப்பட நேரிடும்.

மார்பு இறுக்கம் மாரடைப்புக்கு எச்சரிக்கை

  • ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலும் கூட
  • இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்து விடுகிறது. ஆகவே வியாதிக்கான எந்த அறிகுறியும் தென்படுவது இல்லை.
  • ஆனால் ஒருவர் சக்திக்கு மீறிய செயலில் ஈடுபடும் போது நாளங்கள் குறுகி இருப்பதால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் நெஞ்சுவலி, மார்பு இறுக்கம் போன்ற அறி குறிகள் தோன்றுகின்றன.
  • பின் ஓய்வெடுக்கும் போது இதயத்துக்குத் தேவையான ரத்தமும் ஆக்சிஜனும் கிடைத்து சம நிலை ஏற்படுகிறது. எனவே நெஞ்சுவலி மறைத்து விடுகிறது.
  • மார்பு இறுக்கம் ஒரு நோயல்ல. அது ரத்த நாளங்களின் பாதிப்பை உணர்த்தும் ஓர் அறிகுறி.

நெஞ்சு வலி

  • மார்பு இறுக்கத்தின் முக்கிய அம்சம் நெஞ்சு வலி. நெஞ்செலும்பின் கீழ்ப் பாகத்தில் பின் புறம் தோன்றினாலும் வலி நெஞ்சில் மாத்திரம் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இவ் வலி இரு தோள்களுக்கும் முக்கியமாக இடது தோளுக்கும் அங்கிருந்து கைகள், கழுத்து, தாடை, முதுகுப் பகுதிகளுக்கும் பரவலாம்.
  • சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதியில் பாரம், இறுக்குதல், அஜீரணம் என்று கூட நோயாளி வர்ணிக்கலாம்.
    இந்த அசௌகரியம் சில நிமிஷங்களே நீடிக்கும். மருந்துகளும் ஓய்வும் இவ் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
  • மார்பு இறுக்கத்தினால் இதயத் தசை சேதம் அடை படுவதில்லை. இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் ரத்த நாளங்களில் எந்த நேரத்திலும் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படலாம்.
  • எனவே மருத்துவ சிகிச்சை மேற் கொள்வதற்கான முன் எச்சரிக்கை அறிகுறியே மார்பு இறுக்கம்.
  • சில நேரங்களில் மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்பதை டாக்டரால் தான் கண்டுபிடிக்க முடியும்.
    இந்த அறிகுறியை உதாசீனப் படுத்தக் கூடாது. உடனே டாக்டர் உதவியை நாட வேண்டும்.
  • ஒருவருக்கு எப்போது மார்பு இறுக்கம் ஏற்பட்டாலும், செய்யும் வேலையை உடனே நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க வேண்டும். தாமதம் இல்லாமல் டாக்டர் ஆலோசனையைப் பெற வேண்டும்.
  • ரத்த நாளங்கள் மூலம் இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நீண்ட நேரத்துக்கு தடை பட்டால் இதயத் தசைகளுக்குச் சேதம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பின் அறிகுறி

  • கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிஷங்களுக்கு மேல் நீடிக்கும்.
  • நெஞ்சு வலியுடன் உடலெங்கும் திடீர் வியர்வை, மூச்சுத் திணறல், வாந்தி, பலவீனம், தலைசுற்றல், மயக்கம், வேகமான நாடித் துடிப்பு முதலியனவும் இருக்கும்.
  • அறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு ஏற்படும். இதை “சைலன்ட் ஹார்ட் அட்டாக்” ( Silent Heart Attack) என்பார்கள். மாரடைப்பு ஏற்பட ஆரம்பித்த முதல் ஒரு மணி நேரம் (Golden Hour) மிக முக்கியமான காலகட்டம் :
    மாரடைப்புக்கான நெஞ்சு வலி போன்ற அறிகுறி தெரிந்தவுடன் குறிப்பாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் உடனடியாக டாக்டர் உதவியை நாட வேண்டும். கால தாமதம் உயிருக்கு ஆபத்து.
  • மாரடைப்பு அறிகுறி தெரிந்த உடனே அதே இடத்தில் ஓய்வெடுத்து, உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல உதவி நாட வேண்டும்.
  • மாறாக பாதிக்கப் பட்டவர் வலியுடன் தானாக சைக்கிளை, இரு சக்கர வாகனத்தை, காரை ஓட்டிச் செல்வது மிகவும் ஆபத்து.
  • மார்பு இறுக்கத்துக்கான டாக்டர் அறிவுரைப் படி முன்பே மாத்திரை சாப்பிடுபவராக இருந்தால் நாக்கின் அடியில் நைட்ரேட் மாத்திரை வைக்கலாம். இதனால் வலி குறைய வாய்ப்பு உள்ளது.
  • ஒரு சிலருக்கு மாரடைப்பு ஆரம்பிக்கும் போது தீவிரமாக இருக்கும். அதாவது பெரிய ரத்த நாளம் ஆரம்பத்திலேயே அடைபட்டு அதனால் பாதிக்கப் படும் இதயத் தசை கடினமாக இருக்குமானால் அல்லது அடைப்பு இரண்டு மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் ஏற்படுமானால் இதயம் திடீரென நின்று விடக்கூடும்.
    எப்படி காரில் பெட்ரோல் அடைபட்டால் என்ஜின் நின்று போகிறதோ அது போல.
  • தீவிர மாரடைப்பு வந்தால் முதல் அறிகுறியே திடீர் மயக்கமாக இருக்கலாம்.

நின்று போன இதயத்தை இயங்க வைத்தல்

  • அச் சூழலில் அருகே உள்ளவர்கள் கூட்டம் போட்டு வேடிக்கை பார்க்காமல், அவரைச் சமமான தரையிலே படுக்க வைத்து இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு ஆகியவற்றைப் பரிசோதித்து விட்டு, துடிப்பு இல்லை என்றால் மார்பின் இடது புறம் வேகமாகத் தட்டி, லேசாக அமுக்கிக் கொடுத்தால், சிறிது நேரம் வாய் மூலம் செயற்கை சுவாசம் செய்தால் இதயம் மீண்டும் இயங்கி உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு.
  • மாறாக முகத்தில் தண்ணீர் ஊற்றி, கூட்டம் சேர்ந்து கால தாமதம் செய்தால் உயிரிழப்பு ஏற்படுவது நிச்சயம். ஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்ற முதலுதவியை யாரேனும் தெரிந்து வைத்திருத்தல் நல்லது. மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை தான் இதயத் தசை பழுதடையாமல் தடுக்கவும், அதன் பின் விளைவுகளையும், உயிரிழப்பைத் தடுக்கவும் உதவும்.

பல வருஷங்களுக்கு முன்பெல்லாம், மாரடைப்புக்கு குறைந்தது 3 மாத ஓய்வு தேவை என்ற நிலை இருந்தது. நவீன சிகிச்சை முறையினால் அந்த நிலை மாறி ஓரிரு வாரத்திலேயே குணப் படுத்தி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர முடிகிறது.

மாரடைப்பு வந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கான வாய்ப்பு. அது எத்தனை ரத்த நாளங்களைப் பாதித்துள்ளது என்பதைப் பொருத்தது.

ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் மட்டும் அடைப்பு இருந்தால் ஒரு வாரத்திலேயே குணமடைந்து வீடு திரும்ப முடியும். இரண்டு அல்லது மூன்று ரத்தக் குழய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் தசை அதிகம் பழுதடைந்திருக்குமானால் குறைந்தது 2 வாரம் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொள்ள நேரிடலாம்.
மாரடைப்பு வந்த எல்லா நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியமானது நல்ல ஓய்வு.

சுலபமான ஜீரணிக்கக் கூடிய ஆகாரங்கள், சுத்தமான பிராண வாயு நிறைந்த காற்று, மன உளைச்சலைக் குறைக்கக் கூடிய மருந்துகள், ரத்த நாளத்தை விரிவாக்கும் மருந்துகள், ரத்தக் குழாயில் அடைப்பைக் கரைக்கிற அல்லது ரத்தம் குழையும் தன்மையைக் குறைக்கிற மருந்துகள், இதயத் துடிப்பைச் சீர்படுத்தும் மருந்துகள், மானிட்டர் ஈசிஜி மூலம் கண்காணித்துக் கொடுக்கப் படும்.

ரத்த அழுத்தம், மாரடைப்புக்கான அறிகுறிகள், இதயத் தசையில் பாதிப்பு ஆகியவற்றை ஈசிஜி , எக்கோ ஸ்கேன் மூலம் கண்காணித்த பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மற்ற பிரிவுக்கு மாற்றப் படுவார்கள்.
வீடு செல்லும் போது உணவு உண்ணும் முறைகள், வீட்டிலே செய்யக் கூடிய உடற் பயிற்சி முறைகள், உட்கொள்ளும் மருந்துகள் முதலியவை பற்றி அறிவுரை கூறப்படும்.

எந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளது. ஒரே ரத்தக் குழாயில் ஓரிடத்தில் சிகிச்சை மூலம் அடைப்பை நீக்க இயலுமா, பைபாஸ் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டுமா என்பதைத் தெரிந்து கொள்ள ஆஞ்சியோகிராம் சோதனை மிகவும் அவசியம்.

ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் ஒரு குறுகிய இடத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்திருந்தால் அவர்களுக்கு பலூன் சிகிச்சை சிறந்தது.

மூன்று ரத்தக் குழய்களில் அடைப்பு அதிகம் இருந்தாலோ, பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பலூன் சிகிச்சைக்கு ஏற்றதாக இல்லாத ரத்த நாள அமைப்புள்ள நோயாளிக்கு பைபாஸ் அறுவைசிகிச்சையே சிறந்தது.
பலூன் சிகிச்சை, பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும், கவனக் குறைவால் மாரடைப்பு திரும்ப வருவதற்கான காரணங்கள் தொடருமானால் மீண்டும் மாரடைப்பு வர வாய்ப்பு உண்டு. எனவே மாரடைப்பு வருவதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகச் சேருதல், மன உளைச்சல், சர்க்கரை நோய், உடல் பருமன், குணாதிசயம், உட்கார்ந்த .இடத்திலேயே வேலை செய்தல் முதலியவை மாரடைப்பு வருவதற்கு முக்கியக் காரணங்கள்.

வயது அதிகமாக அதிகமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு கடந்த காலத்திலேயே வந்திருக்குமானால் அந்த சந்ததியினரைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம் உண்டு. அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

30 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ரத்த அழுத்தம், ஈசிஜி, எக்கோ, ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக புகையை நிறுத்தி விட வேண்டும்

The post இதயம் காத்தால் குஷி நிச்சயம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
120