தேவையான பொருள்கள்:-
கோதுமை மாவு – 250 கிராம்
தேங்காய் – 1
சீனி – 250 கிராம்
ஏலக்காய் – 8
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் கோதுமை மாவை சலித்து லேசாக (பச்சை வாசனை போக) வறுத்துக் கொள்ள வேண்டும். அந்த மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவேண்டும். பிசைந்த மாவை இடியாப்ப கட்டையில் போட்டு பிழிந்து, இட்லிப் பானையில் வேகவைத்து, எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி, தண்ணீர் தெளித்து அரைத்து பாலெடுத்து வடிகட்ட வேண்டும். இதில் உப்பு சிறிது மற்றும் ஏலக்காயைப் பொடி செய்துப் போட்டு, சீனியைக் கரைத்து விடவும். இந்தப் பாலில், வேக வைத்த இடியாப்பத்தை போட்டு 10 நிமிடம் ஊறவிட்டு எடுத்துப் பரிமாறவும்.