ஆ…. ஊனா.. முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்.. ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க..
தேவையான பொருட்கள்:
சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் – 2 கப்
கடலைப்பருப்பு – கால் கப்
பாசிப்பருப்பு – கால் கப்
தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் – கால் டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீ ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீ ஸ்பூன்
கடுகு – கால் டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
* முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.
* பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.
* கடைசியாக வெந்த பருப்புகளை அதில் சேர்த்து, தாளித்து இறக்கவும்.