தக்காளி, தேங்காய் சூப்!

தேவையான பொருட்கள்:

தக்காளி – 900 கிராம்
காரட் – 225 கிராம் (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் – 2
பூண்டு – 4 அல்லது 5 பல்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகு தூள் – தேவைக்கேற்ப
வெள்ளைநிற சாஸ் – 2 டீஸ்பூன்

செய்முறை:

தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டவும் தேங்காயை துருவிக் கொள்ளவும், வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கவும். பூண்டை நன்கு நசுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம். பூண்டை வெண்ணையை உருக்கி, அதில் வதக்கவும். தக்காளி, கேரட், தேங்காய் முதலியவைகளை போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு 20 நிமிடம் வேகவிடவும். வெந்த காய்கறிகளை மசித்து, தண்ணீர் விட்டு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 10 நிமிடம் மேலும் கொதிக்கவிடவும். வெள்ளை நிற சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும். ரொட்டி துண்டுகளை வறுத்துப் போட்டு சுடச்சுட பரிமாறவும்.