மனித குலத்துக்கு பேராபத்து: மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ்!

உறைந்த ஏரியில் 48500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜாம்பி வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது மனித குலத்துக்கே பேராபத்தாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவில் இதுவரை உறைந்த ஏரியின் அடியில் புதைந்திருந்த 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “ஜாம்பி வைரஸ்” மூலம் மேலும் ஒரு தொற்றுநோய் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள். “பழங்கால அறியப்படாத வைரஸின் புத்துயிரால் தாவரங்கள், விலங்குகள் அல்லது மனித நோய்களின் விஷயத்தில் நிலைமை மிகவும் பேரழிவு தரும்” என்று “வைரஸ்” ஆய்வு கூறுகிறது.

ஆய்வு அறிக்கையின்படி, புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக நிரந்தரமாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம், இதுபோன்ற சூழ்நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்கள் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாப்ரோஸ்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பிரான்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் 13 வகை வைரஸ்களுக்கு புத்துயிர் அளித்துள்ளனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த “ஜாம்பி வைரஸ்கள்” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் ஐந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை எனவும் அவைகளின் பெயர் மெகா வைரஸ் மம்மத் எனவும், இந்த வைரஸ்கள் யானைகளின் மூதாதையர்களான மாமூத்கள் சைபீரியாவில் சுற்றித் திரிந்த காலத்தைச் சேர்ந்தவை எனவும் பனி காலத்தில் பல வைரஸ்கள் சைபீரியாவின் பெர்மாப்ரோஸ்ட் பனியில் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் “ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை உறைந்திருக்கும் கரிமப் பொருள்களை வெளியிடுவதன்” அமைதியற்ற விளைவைக் கொண்டுள்ளது – ஒருவேளை இதில் கொடிய கிருமிகளும் இருக்கலாம்.

“இந்த கரிமப் பொருளின் ஒரு பகுதியாக புத்துயிர் பெற்ற செல்லுலார் நுண்ணுயிரிகள் (புரோகாரியோட்டுகள், யூனிசெல்லுலர் யூகாரியோட்டுகள்) மற்றும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து செயலற்ற நிலையில் இருக்கும் வைரஸ்கள் உள்ளன” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதில் சிலவற்றை விஞ்ஞானிகள் வெளியே எடுத்து உயிர்ப்பித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம், இதுபோன்ற சூழ்நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதனால்தான் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த வைரஸ்களை முன்கூட்டியே கண்டுபிடித்து ஆய்வு செய்ய விரும்புவதாகவும் இதன் மூலம் அவற்றின் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான வழியைக் கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவை பெரும்பாலும் அமீபா நுண்ணுரியிகளை பாதிக்கும் திறன் கொண்டவையே. இவை மனிதர்களை தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு எனவும், எதிர்காலத்தில் கொரோனா நோய்த்தொற்று போன்று பொதுவானதாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பனிப்பாறைகள் உருகுபோது இதுபோன்ற பழமையான வைரஸ்கள் வெளிப்பட்டாலும் வெளிப்புற சூழலில் எவ்வளவு காலம் தொற்றாக இருக்கும் என்பதும், தனக்கு பொருத்தமான ஒரு உயிர் மீது எப்படி இது தாக்கும் என்பது மதிப்பிடுவது சாத்தியம் இல்லாதது. இருந்தாலும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணிகளால் தொடர்ந்து பனிப்பாறைகள் உருகும் நிலையிலும் ஆர்டிக் பகுதியில் அதிக மக்கள் குடியேறுவதும் ஆபத்துக்கு வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒளி, வெப்பம், ஆக்ஸிஜன் மற்றும் பிற வெளிப்புற சுற்றுச்சூழல் மாறிகள் வெளிப்படும் போது இந்த அறியப்படாத வைரஸ்களின் தொற்று அளவை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா COVID 19 என, பெயரிடப்பட்ட வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்டது. சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு நாடுகளே என்ன செய்வது? என புரியாமல் திகைத்து நின்றன. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் அடைப்பு என, பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில், தற்போது கொரோனா நோய் பரவல் ஒரளவு குறைந்ததை தொடர்ந்து, வழிபாட்டு தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகள் கோர தாண்டவம் ஆடிய கொரோனா தொற்று தற்போது குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், ஒட்டுமொத்த உலக மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் வகையிலான விவகாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருப்பது மனித குலமே பீதியில் உறையும் அளவுக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.