இந்திய எல்லையில் 4 சீன துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 553 கிமீ தொலைவுக்கான இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்த பகுதியில் சில ஆண்டுகளாகவே ட்ரோன் மூலம் அச்சுறுத்தல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகேடிரோன் மூலம் இந்தியாவுக்குள் கடத்தப்படவிருந்த 4 சீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக வந்த டிரோனை உஞ்சா தக்கலாவில் எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி கைப்பற்றினர். டிரோனில் இருந்து வந்த 4 சீன தயாரிப்பு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சீன துப்பாக்கிகள் இந்திய எல்லையில் கண்டெடுக்கப்பட்டதால் எல்லை பாதுகாப்பு படையினர் டிரோன் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.